காதலியை கரம்பிடித்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து; படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

First Published | Jan 20, 2025, 9:37 AM IST

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து தன் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்துள்ளார்.

Ajay Gnanamuthu Marriage

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. அவர் இயக்கிய துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர், கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான முயற்சியால் கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்துவுக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.

Director Ajay Gnanamuthu Marriage

அதுவரை எத்தனையோ பேய் படங்கள் வந்திருந்தாலும் அதில் டிமாண்டி கலானி திரைப்படம் தனித்திருப்பதாக விமர்சகர்களும் வியந்து பாராட்டிய படமாக அது இருந்தது. டிமாண்டி காலனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், அதர்வா ஆகியோர் நடித்த இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இது தரமான கிரைம் த்ரில்லர் படமாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்... விலகுகிறாரா விஜய் சேதுபதி? அடுத்த சீசன் தொகுப்பாளர் பற்றி ஹிண்ட் கொடுத்த பிக் பாஸ்!


Ajay Gnanamuthu Marriage Photos

இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் உடன் கூட்டணி அமைத்த அஜய் ஞானமுத்து, அவர் நடித்த கோப்ரா படத்தை இயக்கினார். இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கோப்ரா திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதனால் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தார் அஜய் ஞானமுத்து.

Ajay Gnanamuthu Wedding

அதன்படி டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய அவர், அப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். அப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. அடுத்ததாக விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அஜய் ஞானமுத்து.

Chiyaan Vikram at Ajay Gnanamuthu Marriage

இந்நிலையில், அஜய் ஞானமுத்துவின் திருமணம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை கரம்பிடித்துள்ளார். கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சீயான் விக்ரம், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸில் ஜெயித்த பணம்; அரசு பள்ளிகளுக்கு இதை செய்யப்போறேன் - முத்துக்குமரன் திட்டவட்டம்

Latest Videos

click me!