பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கமல்ஹாசன் தான். ஏனெனில் இந்நிகழ்ச்சி இன்று பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதற்கு கமல்ஹாசன் தான் முக்கிய காரணம். அவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி என்பதால் இதை ஆவலோடு பார்த்தவர்கள் ஏராளம். இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து 2017-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
25
Bigg Boss Vijay Sethupathi
சீசனுக்கு சீசன் பல்வேறு புதுமைகளுடன் நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சியின் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், 8வது சீசனை தொகுத்து வழங்கப்போவதில்லை என அறிவித்து இந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார். கமல்ஹாசன் விலகியதால் அடுத்த தொகுப்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதில் நயன்தாரா, சூர்யா என பல பிரபலங்களின் பெயர் அடிபட்டாலும், இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அவர் இந்நிகழ்ச்சிக்குள் வந்தது எப்படி என்பதை பற்றி விஜய் டிவியை சேர்ந்த பாலா என்பவர் நேற்று பிக் பாஸ் பைனலில் பகிர்ந்துகொண்டார். அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அணுகியபோது, நான் இந்த ஷோவை பார்த்ததே இல்லை சார் என்று சொல்லி மறுத்துவிட்டாராம். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் தொகுத்து வழங்க ஓகே சொன்னாராம் விஜய் சேதுபதி. நிகழ்ச்சி செல்ல செல்ல அதில் விஜய் சேதுபதியின் ஈடுபாடு அதிகம் இருந்ததாக கூறினார் பாலா.
45
Makkal Selvan Vijay Sethupathi
ஒரு கட்டத்தில் இப்படி செய்யலாம்... அப்படி செய்யலாம் என ஐடியாவெல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். குறிப்பாக அடுத்த சீசனில் ஆடிஷன் நடைபெறுவதையே ஒரு ஷோவாக நடத்தலாம், அப்போது தான் இவர்கள் விஜய் டிவி நட்சத்திரங்கள் அதனால் ஈஸியாக பிக் பாஸிற்குள் வந்துவிட்டார்கள் என்கிற விமர்சனம் குறையும் என்று நல்ல நல்ல டிப்ஸெல்லாம் கொடுத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி பிக் பாஸ் பைனல் மேடையில் விஜய் சேதுபதிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது.
55
Bigg Boss Next Season Host
அந்த வீடியோவில் விஜய் சேதுபதியின் இந்த பிக் பாஸ் பயணத்தை ஒரு சிறு தொகுப்பாக கொடுத்திருந்தனர். அதுமட்டுமின்றி அந்த வீடியோவின் இறுதியில், இன்னும் ஆட்டம் முடியல.. உங்க எல்லாரையும் அடுத்த வருஷம் சந்திக்கிறேன் என்று விஜய் சேதுபதி சொல்லுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதன்மூலம் மக்கள் செல்வன் தான் அடுத்த சீசனையும் தொகுத்து வழங்கப்போகிறார் என்பதை சூசகமாக அறிவித்துள்ளது பிக் பாஸ் டீம்.