Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி அமர்களமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக இதுவரை பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணிநேரத்திலேயே சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்.
Vijay Sethupathi
பின்னர் நிகழ்ச்சி சற்று டல் அடிக்க தொடங்கியதை அடுத்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே வந்தனர். அவர்களின் வருகைக்கு பின்னர் ஆட்டத்தின் போக்கு மாறியது. முதல் 50 நாட்கள் சுமாராக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சி அதன் பின்னர் செம சூப்பராக மாறியது. இதனால் வார வாரம் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. அதில் பல்வேறு தடைகளை தாண்டி விஷால், முத்துக்குமரன், ரயான், பவித்ரா, செளந்தர்யா ஆகிய ஐந்து பேர் பைனலுக்கு சென்றனர்.
இதையும் படியுங்கள்... டாஸ்க் பீஸ்ட் முதல் பெஸ்ட் கேப்டன் வரை; பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் யார்; யார்?
Bigg Boss Title
இவர்களில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ஐந்தாம் இடம் பிடித்த ரயான் இன்று முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 4ம் இடம் பிடித்த பவித்ரா வெளியேறினார். இறுதியாக பிக் பாஸிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட டாப் 3 போட்டியாளர்களான செளந்தர்யா, முத்துக்குமரன், விஷால் ஆகியோர் நேரடியாக பைனல் நடக்கும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் ஆரவாரத்தோடு வரவேற்பளித்தனர்.
Bigg Boss Title Winner Muthukumaran
பின்னர் மேடையில் மூன்றாம் இடம் பிடித்த விஷாலை எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. இறுதியாக செளந்தர்யா மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் இருந்த நிலையில், அவர்களில் மக்களிடம் அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரனின் கையை உயர்த்தி வெற்றிபெற்றதாக அறிவித்தார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் சீசன் 8 டைட்டிலை சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த முத்துக்குமரனுக்கு கோப்பையை வழங்கி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் விஜய் சேதுபதி.
Bigg Boss Title Winner Muthukumaran
பின்னர் முத்துக்குமரனுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதுதவிர பிக் பாஸ் வீட்டில் அதிக முறை கேப்டனாக இருந்த போட்டியாளருக்கு புல்லட் பைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த பைக்கையும் முத்துக்குமரன் வென்றார். இதுதவிர பணப்பெட்டி டாஸ்கில் வென்ற ரூ.50 ஆயிரமும் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்டது. தன் வெற்றியை மேடையில் தன் பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்தார் முத்துக்குமரன். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... வின்னர் முத்துக்குமரன்; ஆனா ரன்னர் யாரு? கடைசி நேரத்தில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்!