தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது 8-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது 5 போட்டியாளர்களுடன் பைனலை நெருங்கி உள்ளது. இதில் ரயான், விஷால், முத்துக்குமரன், செளந்தர்யா, பவித்ரா ஆகிய ஐந்து பேரும் பைனலிஸ்ட் ஆகி உள்ளனர். இவர்களில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
24
Bigg Boss Title Winner Muthukumaran
அந்த வகையில் முத்துக்குமரன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரைத் தொடர்ந்து செளந்தர்யாவுக்கு 2வது இடமும், விஷால், பவித்ரா, ரயான் ஆகியோர் எஞ்சியுள்ள இடங்களை பிடித்துள்ளனர். இதன்மூலம் இந்த சீசனில் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையும் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளருக்கான டிராபியையும் வென்றிருக்கிறார் முத்துக்குமரன்.
ஒவ்வொரு சீசனிலும் அந்த சீசனின் நம்பர் அடங்கிய டிராபியை வடிவமைப்பார்கள். அந்த வகையில் இது 8வது சீசன் என்பதால் இந்த சீசனில் 8-ம் நம்பர் போல் ஒரு டிராபியை வடிவமைத்து இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இதற்கு முந்தைய சீசன்களில் கோல்டு நிறத்தில் டிராபி இருக்கும், ஆனால் இம்முறை வெள்ளை நிறத்தில் டிராபி இருப்பதை பார்த்த நெட்டிசன்கள், அதன் டிசைனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்த மீம்ஸும் இணையத்தில் வைரலாகிறது.
44
Bigg Boss 8 Trophy Memes
அந்த வகையில், அந்த டிராபியை பார்க்கும் போது இராகு கேது சிலையை போல இருப்பதாக ஒப்பிட்டு மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலரோ இந்த டிராபியை வடிவமைத்தவர் செளந்தர்யா ரசிகரா இருப்பார் போல என கிண்டலடித்து வருகின்றனர். முத்துக்குமரனை இழிவுபடுத்தவே இப்படி ஒரு மோசமான டிராபியை வடிவமைத்து இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த டிராபி தொடர்பான மீம்கள் தான் தற்போது செம டிரெண்டிங்கில் உள்ளது.