பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இரண்டாவது இடம் செளந்தர்யாவுக்கு கிடைத்தது. டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மற்றும் பிக் பாஸ் 8 டிராபியையும் விஜய் சேதுபதி கையால் பெற்றுக் கொண்டார் முத்துக்குமரன். அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
24
Muthukumaran, Soundariya
இந்த நிலையில், பிக் பாஸ் மூலம் ஜெயித்த பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என்கிற கேள்விக்கு முத்துக்குமரன் அளித்த பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி முதலில் தன் தந்தை கட்டி வரும் வீட்டின் பணிகள் பாதியில் நிற்பதாகவும், அதற்கான வேலைகளை இந்த பணத்தை வைத்து செய்ய உள்ளதாக கூறிய அவர், தன் தந்தை 27 வருஷமா கடனே இல்லாம தன்னை வளர்த்ததாகவும், தற்போது அந்த வீட்டுக்காக வாங்கிய கடனை இந்த பணத்தை வைத்து அடைக்கப் போகிறேன் என அறிவித்தார்.
இதுதவிர தன்னுடைய இரண்டு நண்பர்களான அந்தோணி, அஸ்வின் ஆகியோருக்கு தொழில் தொடங்க உதவ வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, மிகவும் கம்மியான பணத்தில் அவர்கள் தொழில் தொடங்க தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும் உறுதியளித்தார். மேலும் நா முத்துக்குமார் எழுதிய புத்தகங்களை வாங்கி அரசுப் பள்ளிகளுக்கும், சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பது தனது ஆசை, அதை கண்டிப்பாக செய்வேன் என உறுதியளித்தார்.
44
muthukumaran, vijay sethupathi
நா முத்துக்குமார் எழுதிய ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘அணிலாடும் மூன்றில்’ மற்றும் செல்வேந்திரன் எழுதிய ‘வாசிப்பது எப்படி’ ஆகிய இந்த மூன்று புத்தகங்களை அரசுப் பள்ளிகளுக்கும், சிறைகளுக்கும், சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கும் கொடுக்க உள்ளேன் என்று முத்துக்குமரன் தெரிவித்தார். அவரின் இந்த செயலால் நெகிழ்ச்சி அடைந்த விஜய் சேதுபதி அவருக்கு கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். முத்துக்குமரனின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.