பா. ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டில் ராதா' எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கூறிய பிரபல நடிகர்!

Published : Jan 20, 2025, 12:15 PM IST

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் எழுதியுள்ள திரைப்படம் பாட்டில் ராதா. வரும் வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் விமர்சனம் குறித்து பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.  

PREV
14
பா. ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டில் ராதா' எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கூறிய பிரபல நடிகர்!
Guru Somasundharam

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். இதைத் தொடர்ந்து கடல், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, 49 ஓ, பெஞ்ச் டாக்கீஸ், தூங்கவனம் போன்ற பல படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் குரு சோமசுந்தரத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் தான்.

24
Kudumbasthan Movie

இந்த படத்திற்கு பின்னர் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த குற்றமே தண்டனை, யாக்கை, பாம்பு சட்டை, ஓடு ராஜா ஓடு போன்ற படங்களில் இவருடைய நடிப்பு அதிகம் கவனிக்கப்பட்டது. தமிழ் மட்டுமின்றி மலையாளத் திரை உலகிலும் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் குரு சோமசுந்தரம் பா ரஞ்சித் தயாரிப்பில் நடித்துள்ள 'பாட்டில் ராதா' திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

'லப்பர் பந்து' பட நடிகையை காதலித்து கரம்பிடித்த சன் டிவி சீரியல் ஹீரோ சந்தோஷ்! குவியும் வாழ்த்து!

34
Actor Manikandan

மேலும் இவர் நடித்த குடும்பஸ்தன் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு, கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த நிலையில்...  இந்த படத்தின் முதல் விமர்சனம் குறித்து குடும்பஸ்தன் பட ஹீரோ மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

44
Bottle Radha Movie

'பாட்டில் ராதா' திரைப்படத்தை பார்த்து விட்டதாகவும், நான் ஒரு படத்தை பார்த்து அழுவது மிகவு அரிது அந்த வகையில் பாட்டில் ராதா திரைப்படத்தை பார்த்து அழுதுவிட்டேன். இந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது மிகப்பெரிய வெற்றி பெறும் என கூறியுள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், சஞ்சனா நட்ராஜன் கதாநாயகியான நடித்துளளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஜான் விஜய் , லொள்ளு சபா மாறன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்க தமிழன் படத்தொகுப்பு செய்துள்ள நிலையில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளளார் என்பது குறிப்பிட தக்கது. 

விலகுகிறாரா விஜய் சேதுபதி? அடுத்த சீசன் தொகுப்பாளர் பற்றி ஹிண்ட் கொடுத்த பிக் பாஸ்!
 

Read more Photos on
click me!

Recommended Stories