சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோயின்; என்ன ஆச்சு?

First Published | Jan 20, 2025, 4:55 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மாரி' சீரியலில் இருந்து, கதாநாயகியாக நடித்து வரும் ஆஷிகா படுகோன் அதிரடியாக சீரியலில் இருந்து விலகி விட்டதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
 

Aashika Serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'மாரி'. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் நடக்க உள்ளதை முன்பே அறியும் சக்தி படைத்த ஒரு ஏழை பெண் தன்னுடைய சக்திகளால் எந்த அளவுக்கு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார், பணக்கார பையனை திருமணம் செய்து கொள்வதால், இவரை வெளியேற்ற நடக்குக் சூழ்ச்சிகளை எதிர்பாராத திருப்புமுனைகளுடன் இந்த சீரியல் கூறி வருகிறது.

Tamil serial

சாதாரண சீரியல்களை விட ஆவி, பாம்பு, அமானுஷ்யம், போன்ற அம்சங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அதே போல் தான் இந்த சீரியலுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

பா. ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டில் ராதா' எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கூறிய பிரபல நடிகர்!


Maari Serial Latest Update

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்...  தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தற்போது 800 எபிசோடுகளை கடந்து தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலை ரத்தினம் வாசுதேவன் என்பவர் இயக்கி வரும் நிலையில், ஆஷிகா படுகோன் ஹீரோயினனாக நடிக்க, அதர்ஸ் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் சோனா ஹெய்டன், சிவசுப்பிரமணியன், முகேஷ் கண்ணா, தருண், அப்பாசாமி, அனிதா வெங்கட், தீபா நேத்ரன், அபிதா, டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

Zee Tamil Serial

மீரா கிருஷ்ணன்,  வனிதா விஜயகுமார், பாண்டியராஜன் சுதா சந்திரன், தேவயானி, போன்ற பலர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து, தற்போது வெளியேறி விட்டதாக நடிகை ஆஷிகா தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

'லப்பர் பந்து' பட நடிகையை காதலித்து கரம்பிடித்த சன் டிவி சீரியல் ஹீரோ சந்தோஷ்! குவியும் வாழ்த்து!

Ashika Quit Serial

இது குறித்து ஆஷிகா போட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம்... மூன்று வருடங்களாக, 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வந்த மாரி சீரியலில் என்னுடைய பங்கு முடிவுக்கு வருகிறது. நீங்கள் இவ்வளவு நாள் கொடுத்த அன்புக்கும், ஆதரவுக்கும் மிகவும் நன்றி. தமிழ்நாட்டு மக்களிடம் இதுபோன்ற அன்பை பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் புது சீரியலில் உங்களை சந்திக்கிறேன் ஆஷிகா கோபால் படுகோன் என தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் புதிய நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Latest Videos

click me!