பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சற்றும் எதிர்பாக்காத அளவுக்கு வித்யாசமான டாஸ்க் மூலம் நிகழ்ச்சியை சூடேற்றி வருகிறார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏலியன்களாக மாறி சண்டை மட்டுமே போட்டுக் கொண்டு விளையாடி வருவது, சற்று எரிச்சல் அடைய வைத்தாலும்... எதிர்பாராத ட்விஸ்டுகள் நிகழ்ச்சியை விறுவிறுப்படைய வைத்துள்ளது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர், தன்னைக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வீடியோ வெளியிட்ட ராபர்ட் பின்னர், பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் பலரும் ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவை காதலிக்கிறாரா? என்கிற கேள்வியை தான் பிரதானமாக எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரம் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவிடம் காட்டிய நெருக்கத்தை, வெளியில் இருந்து பார்த்த... அவரது காதலி, ராபர்ட் மாஸ்டர் கொடுத்த மோதிரத்தை அவருக்கே பெட்டியில் வைத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது