பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர், நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட டிக் டாக் பிரபலமாக இருந்தவர் ஜிபி முத்து. சர்ச்சைக்குரிய பல வீடியோக்களை வெளியிட்டதால் இவரை கைது செய்ய வேண்டும் என்றும், இவருடைய வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் பலர் உள்ளனர்.
ஒருவேளை ஜிபி முத்து 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால்... இவர்தான் வெற்றியாளர் என ரசிகர்கள் ஆர்ப்பரித்த நிலையில், தன்னுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததாலும், அவர் மீதுள்ள அன்பாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேறுவதாக அறிவித்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன், பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருவதோடு, சில ஊடகங்களிலும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வரும் ஜிபி முத்து, சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய சகோதரருக்கும் தனக்கும் வேலை செய்யும் இடத்தில் சண்ட ஏற்பட்ட போது அவர் கோபத்தில் கையில் கிடைத்த பிளேடை வைத்து சரமாரியாக உடலில் கிழித்து விட்டார்.