அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'ஆழ்வார்' படத்தில்... அஜித்தின் தங்கையாக நடித்தவர் ஸ்வேதா. இதை தொடர்ந்து 'வள்ளுவனும் வாசுகியும்', 'பூவா தலையா', மீரா உடன் கிருஷ்ணன்', 'நான்தான் பாலா' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்த, ஸ்வேதா... இவர் இந்த சீரியலை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடிக்க துவங்கிய சந்திரலேகா சீரியல் சுமார் 8 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், சமீபத்தில் தான் முடிவடைந்தது. ஒரே சீரியலில் 8 வருடம் தொடர்ந்து நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது.
இவர் நடித்து வந்த சந்திரலேகா சீரியல் முடிவடைந்து, சில மாதங்களே ஆகும் நிலையில்... தற்போது தன்னுடைய 37 வயதில், வருங்கால கணவரை கண்டு பிடித்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவலை உறுதி செய்துள்ளார். இதை தொடர்ந்து இவரது ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.