'ஒத்த செருப்பு' படத்திற்கு பின் மீண்டும் மற்றொரு தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்!

First Published | Dec 1, 2022, 8:04 PM IST

பாலிவுட்திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகை ஐஸ்வர்யா ராய்யின் கணவருமான அபிஷேக் பச்சன் ஒரே மாதிரி கதைகளை தேர்வு செய்யாமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் நிலையில்.. தற்போது தமிழில் பல்வேறு விருதுகளை வாங்கிய 'KD' படத்தின் ஹிந்தி ரீமிக்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

நடிகர் அபிஷேக் பச்சன், தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஒரே ஒரு நபரை மட்டுமே நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் தமிழில் வெளியாகி விமர்சனம் ரீதியாக பாராட்டை பெற்றாலும், வசூலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே நேரம் பார்த்திபனின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. 

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அபிஷக் பச்சன் நடித்து முடித்துள்ள நிலையில், மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் இயக்குனர் மதுமிதா சுந்தரராமன் இயக்கிய நகைச்சுவை திரைப்படமான 'கே டி அல்லது கருப்புதுரை' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், இந்த படத்தின் கதை அவருக்கு பிடித்து போகவே... இந்த படத்தில் நடித்த அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல், விஜய், அஜித், போன்ற பல நடிகர்கள் படத்தை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் மரணம்..!
 

Tap to resize

71 வயதான முதியவருக்கும், எட்டு வயது சிறுவனுக்கும் இடையேயான பிணைப்பை வெளிகாட்டும் விதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. தமிழில் இந்த படத்தில் 71 வயது முதியவராக மு ராமசாமி நடித்திருந்தார். 8 வயது சிறுவனாக நாகா விஷால் நடித்திருந்தார் இந்த படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிறுவன் நாகா விஷால் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் நாகா விஷால் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து, தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி... மதுமிதாவே தான் இப்படத்தியும் இயக்க உள்ளதாகவும், அபிஷேக் பச்சன் 71 வயது முதியவராக  நடித்த மு ராமசாமி வேடத்தில் நடிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்ப இந்த படத்தின் திரைக்கதைகளில் சற்று மாற்றம் செய்து மதுமிதா இயக்க உள்ளார். தமிழ் படத்தின் பதிப்பு கிராமப்புறங்களில் படமாக்கப்பட்ட நிலையில், ஹிந்தியில் எடுக்கப்படவுள்ள 'கே டி' திரைப்படம் கோபாலை சுற்றி  60 நாட்கள் படபிடிப்பு நடத்த மதுமிதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

சாகும் வரை நோயோடு போராட வேண்டும்! சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்..!

Latest Videos

click me!