தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. சினிமாவில் அறிமுகமானபோது ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளார். சமீப காலமாக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
24
லிங்குசாமியின் கெரியரில் பையா படமும் முக்கியமான ஒன்று. அப்படத்தில் கார்த்தியை ஹீரோவாக நடிக்க வைத்திருப்பார் லிங்குசாமி, இதுவே பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்னர் தான் பருத்திவீரன் படத்தில் பக்கா கிராமத்து இளைஞனாக நடித்து பட்டைய கிளப்பிய கார்த்தியை ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாடர்ன் லுக்கிற்கு மாற்றியதே அப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இதில் இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதன் காரணமாகத் தான் அடுத்தடுத்து சிறுத்தை, தோழா போன்ற படங்களில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். ஆனால் முதலில் பையா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருந்தது தமன்னா இல்லையாம்.
44
பையா படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க தான் ஆசைப்பட்டாராம் லிங்குசாமி. ஆனால் சம்பள விவகாரம் காரணமாக நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்ததை அடுத்து தான் தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்களாம். பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த சீக்ரெட் தகவலை சமீபத்திய பேட்டியில் லிங்குசாமி வெளியிட்டுள்ளார். இருப்பினும் இதையடுத்து காஷ்மோரா படத்தில் கார்த்தியும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.