தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது கிசுகிசுவில் சிக்கியுள்ள நிலையில், இவருடைய புதிய உறவு பற்றிய பேச்சு தான் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில்... தனுஷ் நடிக்க உள்ள, திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ள நிலையில் விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு பின்னர், தனுஷ் தன்னுடைய குடும்பத்தினரிடம் கூட அதிகம் பேசாமல் இருக்கும் நிலையில்... சாய்பல்லவின் கட்டுப்பாட்டில் தான் தற்போது இருப்பதாகவும், அவர் தனக்கு தெரிந்த தெலுங்கு பட இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து தான்... தனுஷுக்கு தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளதாகவும்... நடிகை என்ன சொன்னாலும், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தனுஷும் தலையாட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகவே... இதன் காரணமாக தான் ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து நேர்ந்ததா? என நெட்டிசன்கள் சிலர் கொளுத்தி போட்டு வருகிறார்கள்.