1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் ஹீரோக்கள்.. ரஜினி, விஜய், பிரபாஸை விட பல மடங்கு அதிகம்..

First Published | Aug 5, 2024, 12:13 PM IST

அதிக சொத்துக்களுடன் வலம் வரும் பணக்கார நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லட்சங்களில் தொடங்கில் சில கோடிகள் வரை தான் நடிகர்களின் சம்பளம் இருந்தது. ஆனால் தற்போது ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் அல்லு அர்ஜுன், பிரபாஸ் உள்ள்ட்டோர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.

அதே போல் பாலிவுட்டிலும் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்டோர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்கல் மூலம் பாலிவுட் நடிகர்கள் கோடிகளில் சம்பாதிக்கின்றனர். இதன் மூலம் இவர்களின் சொத்துமதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிக சொத்துக்களுடன் வலம் வரும் பணக்கார நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Tap to resize

ஷாருக்கான்

இந்தியாவின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தில் இருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6300 கோடி என்று கூறப்படுகிறது. ஷாருக்கான ஒரு படத்திற்கு ரூ.150 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். 

சல்மான் கான்

இந்த பட்டியலில் நடிகர் சல்மான் கான் 2-வது இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். சல்மான் கானின் சொத்து மதிப்பு ரூ.2900 கோடி என்று கூறப்படுகிறது. 

அக்ஷய் குமார் :

அக்ஷய் குமார் ஒரு படத்திற்கு ரூ.60 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.2500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார். 

அமீர்கான் :

அமீர்கான் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அமீர் கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1862 கோடி என்று கூறப்படுகிறது. 

விஜய் :

நடிகர் விஜய் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ. 115 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் பெறுகிறார். விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.474 கோடி என்று கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் :

நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.120 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அவரின் சொத்து மதிப்பு ரூ.460 கோடி ஆகும். இதன் மூலம் அல்லு அர்ஜுன் இந்த பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறார்.

Kamalhaasan

கமல்ஹாசன் :

நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 450 கோடி ஆகும். அவர் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறார்.

ரஜினிகாந்த் :

நடிகர் ரஜினி ஒரு படத்திற்கு ரூ. 115 கோடி முதல் ரூ.270 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம் அவர் ரூ.430 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறார். 

Ajith

அஜித் :

நடிகர் அஜித் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.165 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடியாகும். அஜித் இந்த பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார்.

Prabhas

பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.241 கோடியாகும். பிரபாஸ் இந்த பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறார். 

Latest Videos

click me!