
இசைஞானி இளையராஜாவின் உடன் பிறந்த சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவே அறியப்படும் இவர் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கவர்ச்சி நடிகை சோனாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது.
இதை தொடர்ந்து, ஒரு சில காதல் சமாச்சாரங்களிலும் சிக்கிய பிரேம்ஜிக்கு எந்த காதலும் திருமணத்தில் கை கூடவில்லை. எனவே தன்னை முரட்டு சிங்கிள் என கெத்தாக கூறி வந்தார்.
ஒரே படத்தில் பேம்ஸ் ஆகி... பின் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன 5 நடிகைகள் லிஸ்ட் இதோ
மேலும் பத்திரிகையாளர்கள் முதல், குடும்ப உறவினர்கள் வரை, எப்போது உங்கள் திருமணம் என பிரேம்ஜி-யிடம் பல கேள்வி எழுப்பிய நிலையில், கடந்த மே மாதம் தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சகோதரருக்கு திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தார்.
அதன்படி ஜூன் 9-ஆம் தேதி பிரேம்ஜிக்கும் அவருடைய காதலியான ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்து என்பவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. வெங்கட் பிரபு தாலி எடுத்து கொடுக்க, தன்னுடைய தந்தை கங்கை அமரன் ஆசீர்வாதத்துடன் காதலியை கரம் பிடித்தார் பிரேம்ஜி.
80ஸ் ஹீரோயின்கள் கொண்டாடிய பிரெண்ட்ஷிப் டே! வைரலாகும் குரூப் போட்டோ!
பிரேம்ஜி-யில் திருமணத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினர். இளையராஜா வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததால் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக திருமணத்திற்கு முன்பே இருவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து தன்னுடைய சிறப்பு பரிசுகளையும் கொடுத்து கௌரவித்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதால் மாறிவிட்டதாலும், பிரேம்ஜி-யின் திருமணம் இந்து கோவிலில் நடந்ததாலும், இதில் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. ஆனால் இது குறித்து பிரேம்ஜி மற்றும் யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
பிரேம்ஜி திருமணமான கையோடு மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வது, சமைப்பது வேலைகளை செய்யும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்ததோடு, ஒரு சில விமர்சனங்களுக்கும் ஆளானது. இதைத்தொடர்ந்து பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளா, அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பிரேம்ஜிக்கு பெண்ணே கொடுக்கக் கூடாது என நினைத்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது இந்து தன்னுடைய காதல் பற்றி தெரிவித்த பின்னர், பிரேம்ஜி கொடுத்த பேட்டிகள் மற்றும் அவரைப் பற்றி வெளியான செய்திகளை பார்த்துவிட்டு, இது எனக்கு சரியா படல, பிரேம்ஜிக்கு பெண்ணே கொடுக்கக் கூடாது என்று சொல்லிட்டேன். அப்புறமா அவரிடம் பழகி பார்க்கும் போது தான் தெரிஞ்சது, அவர் ரொம்ப தங்கமான பையன் என்பது. பிரேம்ஜியை பொருத்தவரை பெரியவர்களிடம் எப்போதுமே மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார். என்னை என் மகள் ஏதாவது வேலை சொன்னால் கூட, பிரேம்ஜி அவங்கள எந்த வேலையும் சொல்லாத என செல்லமாக அதட்டுவார். அவர் எனக்கு மருமகன் மட்டுமில்ல இன்னொரு மகன் என ஷர்மிளா கூறி உள்ளார்.
பிரேம்ஜி திருமணமான கையோடு, தன்னுடைய மாமியாரின் திறமையை வெளியே கொண்டு வரும் விதமாகமசாலா கம்பெனி ஒன்றை வைத்து கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு பிரேம்ஜி மாமியார் மசாலா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பற்றி ஷர்மிளா கூறுகையில், எங்களுடைய குடும்பம் கூட்டுக் குடும்பம். எனவே ஒவ்வொரு நாளும் சமைப்பது ஒரு கல்யாணத்துக்கே சமைப்பது போன்று தான் இருக்கும். சமையல் சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு மசாலாவையும் வெளியில் இருந்து வாங்கி செய்ய மாட்டோம். வீட்டிலேயே தான் தயார் செய்வோம். என் மாமியார் எப்போதுமே சமையலுக்கு சுவையை தருவது மசாலா தான் என கூறுவார். வீட்டிலேயே நாங்கள் தயாரிக்கும் மசாலா நாங்கள் வைக்கும் சமையலுக்கு கூடுதல் சுவையை தரும். இந்த விஷயத்தை இந்து என் மருமகனிடம் சொல்ல, அப்போ அதையே ஒரு பிஸினஸா செய்யலாம் என கூறி எங்களை ஊக்கப்படுத்தியதோடு. தொழில் தொடங்க காரணமாகவும் மாறியுள்ளார். எனவே தான் எங்கள் மசாலா பொருட்கள் நிறுவனத்திற்கு பிரேம்ஜி மாமிஸ் மசாலா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.