ஒரே படத்தில் பேம்ஸ் ஆகி... பின் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன 5 நடிகைகள் லிஸ்ட் இதோ

Published : Aug 05, 2024, 10:43 AM IST

ஒரே படத்தில் ஓஹோனு பேமஸ் ஆன பின்னர் சினிமாவில் இருந்து விலகிய நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
ஒரே படத்தில் பேம்ஸ் ஆகி... பின் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன 5 நடிகைகள் லிஸ்ட் இதோ
மானு

அஜித்தின் கிளாசிக் ஹிட் படமான காதல் மன்னன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மானு. அப்படத்தில் இவர் நடித்த திலோத்தமா கேரக்டர் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மானு, அதன்பின்னர் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு கணவருடன் சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் 2014-ல் வெளிவந்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் பிளாப் ஆனதால் அதன் பின் படங்களில் நடிக்கவில்லை.

25
பிரியா கில்

அஜித்துடன் நடித்து ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன மற்றொரு நடிகை பிரியா கில். இவர் சிங்கம் புலி இயக்கத்தில் அஜித் நடித்த ரெட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்திற்கு பின்னர் சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகிய பிரியா கில், திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

35
மோனிகா கேஸ்ட்லினோ

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த திரைப்படம் மின்சார கண்ணா. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மோனிகா கேஸ்ட்லினோ. இவர் பாலிவுட்டில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தாலும் தமிழிலும் மின்சார கண்ணா படத்துக்கு பின்னர் வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... Raayan Box Office : தொடரும் வசூல் வேட்டை... பாக்ஸ் ஆபிஸில் மகாராஜா பட சாதனையை 9 நாளில் காலி செய்த ராயன்

45
ரிங்கி கண்ணா

கோலிவுட்டில் இருந்து காணாமல் போன மற்றொரு ஹீரோயின் ரிங்கி கண்ணா. இவர் பிரசாந்த் ஜோடியாக மஜ்னு படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் மகள் ஆவார். இந்தியில் சில படங்களில் நடித்த ரிங்கி கண்ணா, பின்னர் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகினார்.

55
ரோஷினி

கோலிவுட்டில் இருந்து மிஸ் ஆன மற்றொரு நாயகி என்றால் அது ரோஷினி தான். இவர் கமல்ஹாசனின் கிளாசிக் ஹிட் திரைப்படமான குணாவில் நடித்திருந்தார். அதில் இவர் நடித்த அபிராமி கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது. இருப்பினும் அப்படத்துக்கு பின்னர் சினிமாவை விட்டே விலகிவிட்டார் ரோஷினி.

இதையும் படியுங்கள்... இவங்கெல்லாம் கிளாஸ்மேட்ஸா? பள்ளியில் ஒன்றாக படித்த சினிமா பிரபலங்கள் லிஸ்ட் இதோ

click me!

Recommended Stories