Maharaja, Garudan, Raayan
2024-ம் ஆண்டின் முதல் பாதி தமிழ் சினிமாவுக்கு சோதனை மிக்கதாகவே இருந்தது. ஏனெனில் இந்த ஆண்டின் முதல் 5 மாதத்தில் ஒரு தமிழ் படம் கூட 100 கோடி வசூல் சாதனையை எட்டவில்லை. அந்த காலகட்டத்தில் சிவகார்த்திகேயன், தனுஷ், ரஜினி, ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியும் அது எடுபடவில்லை. அப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், பரிதாப நிலையில் இருந்த தமிழ் சினிமாவை சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் தான் மீட்டெடுத்தது.
maharaja
அரண்மனை 4 திரைப்படம் தான் இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் படமாகும். அதன்பின்னர் சூரியின் கருடன், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ஆகியவை அடுத்தடுத்து ஹிட் ஆனதால் கோலிவுட் படிப்படியாக மீண்டு வருகிறது. அதிலும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.109 கோடி வசூலித்து இருந்தது. அப்படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை தனுஷின் ராயன் படம் முறியடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... இவங்கெல்லாம் கிளாஸ்மேட்ஸா? பள்ளியில் ஒன்றாக படித்த சினிமா பிரபலங்கள் லிஸ்ட் இதோ
raayan, maharaja
தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஜூலை 26-ந் தேதி திரைக்கு வந்தது. 50வது படமான இதில் ஹீரோவாக நடித்திருந்தது மட்டுமின்றி இயக்கியும் இருந்தார் தனுஷ். ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இரண்டு வாரங்களை கடந்து வெற்றிநடை போட்டு வரும் ராயன் திரைப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது.