கமல் ஸ்ரீதேவி முதல் சூர்யா ஜோதிகா வரை; அட அட என்ன ஒரு கெமிஸ்ட்ரினு சொல்ல வைத்த டாப் 5 கோலிவுட் காதல் ஜோடிகள்

First Published | Aug 5, 2024, 7:52 AM IST

தமிழ் சினிமாவில் படங்களில் ஜோடியாக நடித்து ரொமான்ஸில் பிச்சு உதறிய டாப் 5 காதல் ஜோடிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி

புரட்சி தலைவர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். புரட்சிகரமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த எம்.ஜி.ஆர், நிறைய நடிகைகளோடு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். அதில் அவருக்கு திரையில் பொறுத்தமான ஜோடி என்றால் அது சரோஜா தேவி தான். இவர்கள் இருவரும் இணைந்து அன்பே வா, படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, நாடோடி மன்னன் போன்ற கிளாசிக் ஹிட் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதிலும் அன்பே வா படத்தில் இடம்பெறும் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் இருக்கும்.

சிவாஜி கணேசன் - பத்மினி

தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் சிவாஜி கணேசன் - பத்மினி ஜோடியும் உண்டு. இவர்கள் இருவரும் ஜோடியாக 40 படங்களில் நடித்துள்ளனர். அதில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் தான் இருவரது நடிப்பும் மிகவும் ஹைலைட்டாக பேசப்பட்டது. பின்னர் ராஜா ராணி, வியட்னாம் வீடு, உத்தமபுத்திரன், தேனும் பாலும் என இந்த ஜோடி கொடுத்த கிளாசிக் ஹிட் படங்கள் ஏராளம். அந்த படங்களெல்லாம் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... டன் கணக்கில் வெள்ளி.. 28 கிலோ தங்கம்.. புடவை மட்டும் 10000க்கும் மேல - இந்தியாவின் ரிச் நடிகையாக வாழ்ந்த ஜெ!

Tap to resize

கமல் - ஸ்ரீதேவி

கமல்ஹாசன் - ஸ்ரீதேவி இருவரும் இணைந்து 35 படங்களில் பணியாற்றி உள்ளனர். கமலைப் போல் ஸ்ரீதேவியும் சிறுவயதில் இருந்தே நடித்து வந்தார். பின்னர் மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக்கான சாத்மா படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் டாப் ஹீரோயின் ஆனார். கமலுடன் இணைந்து 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சிகப்பு ரோஜாக்கள் போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்திருக்கிறார் ஸ்ரீதேவி.

அஜித் - ஷாலினி

ரீல் ஜோடியாக நடித்தபோது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி பின்னர் ரியல் ஜோடி ஆனவர்கள் தான் அஜித் - ஷாலினி. இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தது ஒரே ஒரு தமிழ் படம் தான். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அமர்க்களம் படத்தின் வெற்றிக்கு அஜித் - ஷாலினி ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணம். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த காம்போவில் நிறைய படங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் முடிந்த கையோடு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஷாலினியும் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

சூர்யா - ஜோதிகா

சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடியாக கொண்டாடப்படுபவர்கள் சூர்யா - ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர். குறிப்பாக காக்க காக்க படத்தில் இவர்களது ரொமான்ஸ் காட்சிகள் ஒரு ஹைலைட்டாக அமைந்தது. ஒரு ரியல் காதல் ஜோடி போலவே திரையில் பிரதிபலித்து இருந்தனர். அதன் பின்னர் இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 80ஸ் ஹீரோயின்கள் கொண்டாடிய பிரெண்ட்ஷிப் டே! வைரலாகும் குரூப் போட்டோ!

Latest Videos

click me!