உங்களால் தான் சம்பாதித்தோம்; உங்களுக்கே அள்ளி கொடுக்கிறோம் - கேரளாவுக்கு நிதி உதவி அளித்த நடிகர்கள்

First Published | Aug 4, 2024, 10:22 PM IST

நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள கேரளா மாநிலத்திற்கு நிதி உதவி அளித்த திரை பிரபலங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

அல்லு அர்ஜூன்

சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். கேரளா எப்போதுமே எனக்கு மிகுந்த அன்பைக் கொடுத்துள்ளது, மேலும் மீட்பு பணிகளுக்கு ஆதரவாக கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன். உங்கள் பாதுகாப்பு மற்றும் வலிமைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி

கேரளாவில் கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் பேரழிவு மற்றும் இழப்புகளால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. வயநாடு சோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரண் மற்றும் நானும் இணைந்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை வழங்குகிறோம். வலியில் வாடும் அனைவரும் குணமடைய எனது பிரார்த்தனைகள்!

Tap to resize

மோகன் லால்

பிரபல நடிகர் மோகன் லால், இராணுவ உடை அணிந்து வயநாடு பகுதியை பார்வையிட்டது மட்டும் இன்றி மூன்று கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் இது மிகவும் துயரமான சம்பவம் என தன்னுடைய வேதையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

கமலஹாசன்

கேரளாவின் துயரைக் கண்டு தான் கண் கலங்கி நிற்பதாக கூறிய உலக நாயகன் கமல்ஹாசன், வயநாடு மக்களுக்கு உதவ 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார்.

சூர்யா

நடிகை ஜோதிகா, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் இணைந்து 50 லட்சம் ரூபாயை வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிசியாக வளம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தானா, கேரளாவின் துயர் நீக்க 10 லட்சம் ரூபாயை நிதியாக கொடுத்திருக்கிறார். 

நஸ்ரியா

அதேபோல மலையாள திரை உலகை சேர்ந்த நட்சத்திர தம்பதிகளான நஸ்ரியா மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து சுமார் 25 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.

Latest Videos

click me!