இவங்கெல்லாம் கிளாஸ்மேட்ஸா? பள்ளியில் ஒன்றாக படித்த சினிமா பிரபலங்கள் லிஸ்ட் இதோ

First Published | Aug 5, 2024, 9:08 AM IST

பள்ளியில் ஒன்றாக படித்து இன்று சினிமாவில் டாப் ஸ்டாராக இருக்கும் பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சூர்யா - மகேஷ் பாபு

நடிகர்கள் சூர்யாவும் மகேஷ் பாபுவும் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள். சென்னையில் உள்ள செயிண்ட் பீட்ஸ் பள்ளியில் தான் இருவரும் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்தனர். சூர்யா - மகேஷ் பாபு இருவருமே ஒரே கிளாஸ்மேட்ஸ் தான். பள்ளியில் மதிய உணவை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாம்.

ராணா டகுபதி - நாக் அஸ்வின்

பாகுபலி வில்லன் ராணா டகுபதியும், கல்கி என்கிற பிளாக்பஸ்டர் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். இருவருமே தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களாக உள்ளனர். நாக் அஸ்வின் தற்போது கல்கி இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் பிசியாக உள்ளார். அதேபோல் ராணா டகுபதி ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

Tap to resize

துல்கர் சல்மான் - பிருத்விராஜ் சுகுமாரன்

துல்கர் சல்மானும், பிருத்விராஜும் தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவருமே பள்ளிப்பருவ தோழர்கள். ஒன்றாக படித்தது மட்டுமின்றி அருகருகே வசித்து வந்ததால் ஒன்றாக விளையாடுவது, சாப்பிடுவது என நெருங்கிய தோழர்களாக இருந்து வருகின்றனர். அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. 

இதையும் படியுங்கள்...கமல் ஸ்ரீதேவி முதல் சூர்யா ஜோதிகா வரை; அட அட என்ன ஒரு கெமிஸ்ட்ரினு சொல்ல வைத்த டாப் 5 கோலிவுட் காதல் ஜோடிகள்

அனுஷ்கா சர்மா - சாக்‌ஷி தோனி

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, மற்றொரு கிரிக்கெட் வீரரின் மனைவியோடு பள்ளியில் ஒன்றாக படித்தவர். அந்த வீரர் வேறுயாருமில்ல தல தோனி தான். அவரின் மனைவி சாக்‌ஷியுடன் தான் அனுஷ்கா பள்ளியில் ஒன்றாக படித்துள்ளார். இருவரும் அசாமின் மார்கரிட்டாவில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியில் படித்தனர்.

கார்த்தி - யுவன் சங்கர் ராஜா

நடிகர் கார்த்தியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் சீனியராக நடிகர் சூர்யா, மகேஷ் பாபு ஆகியோரும் அதே பள்ளியில் படித்துள்ளனர். ஸ்கூல் படிக்கும் போது யுவன் உடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டிகளை நடிகர் கார்த்தி பல்வேறு பேட்டிகளில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இன்று சினிமாவில் இருவரும் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... டன் கணக்கில் வெள்ளி.. 28 கிலோ தங்கம்.. புடவை மட்டும் 10000க்கும் மேல - இந்தியாவின் ரிச் நடிகையாக வாழ்ந்த ஜெ!

Latest Videos

click me!