ஒருத்தர கூட மிஸ் பண்ணல.. ரஜினி முதல் விஜய் வரை - அனைவருக்கும் போட்டோவோடு Friendship Day வாழ்த்து சொன்ன மீனா!
Actress Meena : நடிகை மீனா நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், தான் பயணித்த திரை பிரபலங்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
Venkatesh
தமிழ் சினிமா மட்டுமின்றி பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, இன்று புகழின் உச்சியில் இருக்கும் மாபெரும் நடிகை தான் மீனா. அவர் தனது சகாக்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
Prabhu
அன்புள்ள ரஜினிகாந்த் என்கின்ற திரைப்படத்தில் நடிகை மீனா, சூப்பர் ஸ்டாருக்கு மகள் வயது கொண்ட ஒரு சிறுமியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு அவருடன் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்திருந்தார்.
Keerthy
உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு மட்டுமல்லாமல் மம்மூட்டி, மோகன்லால், இளைய திலகம் பிரபு உள்ளிட்ட பல நடிகர்களோடு குழந்தை நட்சத்திரமாகவும், அதன் பிறகு நாயகியாகவும் தான் நடித்திருப்பதாக அண்மையில் தான் கூறினார் நடிகை மீனா.
Sathyaraj
பழகுவதற்கு எளிமையான, இனிமையான குணம் கொண்ட நடிகை மீனா பல மொழிகளில் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவருக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.
Vijay
சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவரை இழந்த மீனா தற்பொழுது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து, மீண்டும் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அவருடைய மகளும் தற்பொழுது நடிகையாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
rajini
நடிகை மீனா, கோலிவுட், டோலிவுட் மற்றும் மோலிவுட் என்று அனைத்து திரையுலகிலும் உள்ள டாப் நடிகர்களோடு ஜோடியாக நடித்த வெகு சில நடிகைகளில் ஒருவர் ஆவார்.
ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட பல கோடி! அதிக சம்பளம் அள்ளும் ஐட்டம் சாங் அழகிகள்!