தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் தற்போது கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். விஜய்யுடன் அவர் கூட்டணி அமைக்கும் முதல் படம் இதுவாகும். கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்யும், யுவனும் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
24
GOAT Movie Vijay
கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி, மைக் மோகன், சினேகா, நிதின் சத்யா, அஜ்மல், பிரபுதேவா, லைலா, பிரசாந்த், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், அதற்காக டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்டி இருக்கின்றனர்.
கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோட் படத்தின் சிறப்பு காட்சியை இயக்குனர் வெங்கட் பிரபு உடன் சேர்ந்து பார்த்துள்ள நடிகர் விஜய், அப்படத்தின் முதல் விமர்சனத்தையும் கூறி இருக்கிறார். படம் பார்த்த பின் தளபதி என்ன சொன்னார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
44
Vijay GOAT movie review
அதன்படி, படம் பார்த்து பிரம்மித்துப் போன விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், கலக்கிட்ட என பாராட்டிய விஜய், அவசரப்பட்டு retirement அறிவிச்சிட்டேன்.. உன் கூட இன்னொரு படம் பண்ணிருக்கலாம் என வருத்தத்துடன் கூறினாராம். சமீபத்தில் விஜய்யின் டீ ஏஜிங் லுக் விமர்சனத்துக்குள்ளானதை நோட் பண்ணிய படக்குழு அதனை சரிசெய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கோட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.