47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி; சங்கீதாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - போட்டோஸ்!

Published : Feb 08, 2025, 12:19 PM IST

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியும், சீரியல் நடிகையுமான சங்கீதாவுக்கு தற்போது மிகவும் எளிமையாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த சில புகைப்படங்கள் இதோ...  

PREV
16
47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி; சங்கீதாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - போட்டோஸ்!
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி:

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய 47 வயதில், கடந்த 2023 ஆம் ஆண்டு, நீண்ட நாள் காதலி ஆன சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது சங்கீதா கர்ப்பமாக உள்ளார். இவருடைய வளைகாப்புக்கு முன்பு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

26
ரெடின் கிங்ஸ்லி தனித்துவமான காமெடி ஸ்டைல்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகும் அனைவருமே நிலையான இடத்தை பிடித்து விடுவதில்லை. திறமையும், தனக்கான தனி அடையாளமும் கொண்டு அறிமுகமாக ஆகுபவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய பேச்சிலேயே தனித்துவமான ஸ்டைலை வெளிப்படுத்தியவர் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. ஆரம்பத்தில் சில படங்களில் டான்ஸராக பணியாற்றியுள்ள ரெடின் கிங்ஸ்லி, பின்னர் தொழிலதிபராக மாறி தற்போது வரை வெற்றிகரமாக தன்னுடைய பணியை செய்து வருகிறார்.

பண மோசடி வழக்கில் பிடிவாரண்ட் - சோனு சூட் விளக்கம்!

36
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான படங்கள்:

எனினும் சினிமா மீதான இவருடைய ஆசைக்கு தீனி போட்டவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். சிம்புவை வைத்து இவர் இயக்கிய வேட்டைமான் படத்தில், ரெடின் கிங்ஸ்லி-க்கும் காமெடி காமெடி கதாபாத்திரத்தை கொடுத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த திரைப்படம் வெளியாகாமல் போனது. இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்திலும் காமெடி ரோலில் ரெடின் கிங்ஸ்லி  நடித்திருந்தார். இந்த படம் நடிகை நயன்தாராவுக்கும் திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்த திரைப்படம், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

46
அடுத்தடுத்து வெளியான படங்கள்:

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' திரைப்படத்தை இயக்கிய நெல்சன்,  ரூ.100 கோடி வசூல் இயக்குனராக மாறினார். விஜய் வைத்து, இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் லாபத்தை பெற்று தந்தது. இதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, திலீப் குமார் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் மாஸான வசூலை கைப்பற்றியது. 2023 அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் 'ஜெயிலர்' முதல் இடத்தை பிடித்தது.

2-ஆவது நாள் வசூலில் 65% சரிவை கண்ட 'விடாமுயற்சி'! ஷாக்கிங் ரிப்போர்ட்!

56
விரைவில் கதையின் நாயகனாக மாறுவாரா ரெடின் கிங்ஸ்லி:

இதைத்தொடர்ந்து அடுத்ததாக 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்காக நெல்சன் திலீப் குமார் தயாராகி வருகிறார். இந்த படத்திலும் ரெடின் கிங்ஸ்லி கண்டிப்பாக இருப்பார் என கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி... இவரின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. யோகி பாபு, சூரி, ரோபோ சங்கர், வரிசையில் இவரும் கூடிய விரைவில் கதையின் நாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு தற்போது எளிமையான முறையில் வளைகாப்பு நடந்துள்ளது.

66
மனைவிக்கு ரெடின் கிங்ஸ்லி நடத்திய வலைகாப்பு

கர்ப்பமாக இருப்பதால், சீரியல் நடிகை சங்கீதா ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சங்கீதாவுக்கு, எளிமையான முறையில் வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. வளைகாப்புக்காக தயாராகி இருக்கும் சங்கீதாவின் சில வீடியோக்களை இவருடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன.

நடிகை சாய் பல்லவியின் விபரீத ஆசை; ஓப்பனாக போட்டுடைத்த நாக சைதன்யா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories