பண மோசடி வழக்கில் பிடிவாரண்ட் - சோனு சூட் விளக்கம்!

Published : Feb 08, 2025, 11:01 AM IST

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிரா மோசடி வழக்கில் லூதியானா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்து, சோனு சூட் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.  

PREV
15
பண மோசடி வழக்கில் பிடிவாரண்ட் - சோனு சூட் விளக்கம்!
பாலிவுட் நடிகர் சோனு சூட்:

பண மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிரா பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா கொடுத்த, பத்து லட்ச ரூபாய் மோசடி வழக்கில்தான் தற்போது இவருக்கு இந்த பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுளள்ளது. 
 

25
ராஜேஷ் கண்ணா என்பவர் சோனு சூட் மீது வழக்கு :

இதில் முக்கியக் குற்றவாளியாக மோஹித் சுக்லா, மற்றும் ரிஜிகா காயின்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலீடு திட்டம் ஒன்றில், பணம் போட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி இவர்கள் இந்த பண மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த திட்டத்தின் விளம்ப தூதர் சோனு சூட் தான் என கூறியுள்ளனர். ஏனவே பணத்தை இழந்த, ராஜேஷ் கண்ணா சோனு சூட் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குல சாட்சியம் அளிக்க சோனு சூட்டை நீதிமன்றம் அழைத்தும், அவர் நீதிமன்றம் அனுப்பின சம்மனை ஏற்காததால் இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

நடிகை சாய் பல்லவியின் விபரீத ஆசை; ஓப்பனாக போட்டுடைத்த நாக சைதன்யா!
 

35
பண மோசடி வழக்கில் சோனு சூட்டுக்கு பிடி வாரண்ட்

சோனு சூட்டைக் கைது செய்ய, மும்பை அந்தேரி வெஸ்ட்லவில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு லூதியானா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகை தாண்டி இவரது ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொரோனா காதல் இருந்து தற்போது வரை, தன்னுடைய வீட்டை விற்று பல கோடி மக்களுக்கு செலவு செய்த, சோனு சூட், இந்த 10 லட்சம் ரூபாய் எப்படி மோசடி செய்திருப்பார் என ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
 

45
சோனு சூட் - விளக்கம்

தற்போது இந்த விவகாரம் குறித்து, சோனு சூட் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவரு கூறி இருபதாவது, "தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.  சம்பந்தமில்லாத விஷயத்தில் சாட்சி சொல்ல நீதிமன்றம் தன்னை அழைத்துள்ளதாகவும், அந்த வழக்கில் தான் எனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தின் அம்பாசிடர் நான் இல்லை என கூறிவிட்டேன். தன்னுடைய பெயரை சிலர் விளம்பரத்துக்காக பயன்படுத்தி இருப்பதாகவும், இது தொடர்பா கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

2-ஆவது நாள் வசூலில் 65% சரிவை கண்ட 'விடாமுயற்சி'! ஷாக்கிங் ரிப்போர்ட்!
 

55
அண்மையில் கூட 4 ஆம்புலன்ஸ் வழங்கினார் சோனு சூட்

இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 10-ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சோனு சூட்  நீதிமன்றத்துல் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருப்பதால் அவர் லூதியான நீதி மன்றத்தில் ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுறதுக்கு கொஞ்ச நாள் முன்பு, சோனு சூட் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, அந்த மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்த நாலு ஆம்புலன்ஸ்களை நன்கொடையா கொடுத்திருந்தார். சோனு சூட் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஆந்திர முதல்வர் நாயுடு கூட எடுத்த படங்களைப் பகிர்ந்துக்கிட்டார். அதே போல் சோனு சூட் இயக்குனரா அறிமுகமாகும் 'ஃபதே'. கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்ள் பெற்றது. நிஜ வாழ்ககையில் நடந்த சைபர் க்ரைம் சம்பவத்தை மையமா வைத்தே இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories