நாக சைதன்யா தனது மனைவி சோபிதாவை எப்படி அழைக்கிறார் தெரியுமா?

Published : Feb 08, 2025, 10:57 AM IST

Naga Chaitanya call his wife Using Nickname : திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா தனது மனைவி சோபிதா துலிபாலாவை புஜ்ஜி என்று அழைப்பது தான் வழக்கமாம். இப்போது அதே பெயரில் தான் தண்டேல் படத்தில் சாய் பல்லவியை அழைக்கிறார்.

PREV
14
நாக சைதன்யா தனது மனைவி சோபிதாவை எப்படி அழைக்கிறார் தெரியுமா?
நாக சைதன்யா மற்றும் சோபிதா

Naga Chaitanya call his wife Using Nickname : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நாகர்ஜூனா. எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு அமலா சினிமாவில் நடிக்கவில்லை. இதையடுத்து நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும் காதல் வயப்பட்டார். அவர் நடிகை சமந்தாவை காதலிக்கவே இருவருக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற்றது.

24
நாக சைதன்யா

ஆனால், திருமணமாகி 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டது. 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் தான் 3 ஆண்டுகள் கால இடைவெளிக்கு பிறகு நாக சைதன்யா 2ஆவது திருமணம் செய்து கொண்டார். ஆம், பொன்னியின் செல்வன் படம் மூலமாக பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார்.

34
தண்டேல் படத்தின் காட்சி

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக நாக சைதன்யா நடிப்பில் உருவான தண்டேல் படம் வெளியானது. இந்த படத்திற்கு தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு படத்திற்கு பிறகு தாடியை சேவ் செய்திருந்த நிலையில் அதனால் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியிருந்தார். தண்டேல் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்தப் படம் முதல் நாளில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி குவித்திருந்தது. இதற்கு முன்னதாக சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடிப்பில் வந்த லவ் ஸ்டோரி முதல் நாளில் ரூ.10.5 கோடி குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

44
சோபிதாவை புஜ்ஜி என்று அழைக்கும் நாக சைதன்யா

இந்த நிலையில் தான் 2ஆவது இன்னிங்ஸ் தொடங்கிய நாக சைதன்யா தனது மனைவியை எப்படி அழைப்பார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.  சோபிதா மீது தனக்கு இருக்கும் அன்பை சைதன்யா பலமுறை பகிர்ந்துள்ளார். தற்போது அவர்களுக்குள் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம். சமந்தாவுடனான விவாகரத்திற்குப் பிறகு சோபிதாவை மணந்தார் சைதன்யா. திருமணம் குறித்த செய்தி பல நாட்கள் ரகசியமாகவே இருந்தது.

கஸ்டடி படத்திற்குப் பிறகு தண்டேல் படத்தில் நடித்தார். சோபிதாவை புஜ்ஜி தள்ளி என்று அழைப்பதாக சைதன்யா கூறியுள்ளார். தண்டேல் படத்திலும் நாயகியை இதே பெயரில் அழைக்கிறார். சந்தீப் வாங்காவைப் பற்றி சைதன்யா பாராட்டி பேசினார். கீதா ஆர்ட்ஸில் பணிபுரிவது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories