திடீரென பிரதமர் மோடியை சந்தித்த நாக சைதன்யா, சோபிதா ஜோடி!

Published : Feb 08, 2025, 10:17 AM ISTUpdated : Feb 08, 2025, 11:43 AM IST

Nagarjuna Family Gifts PM Narendra Modi : நாக சைதன்யா நடிப்பில் உருவான தண்டேல் படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் நாகர்ஜூனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவருக்கு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

PREV
16
திடீரென பிரதமர் மோடியை சந்தித்த நாக சைதன்யா, சோபிதா ஜோடி!
தண்டேல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

Nagarjuna Family Gifts PM Narendra Modi : இயக்குநர் சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவான தண்டேல் படம் நேற்று திரைக்கு வந்தது. மீனவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாக சைதன்யா (ராஜூ), சாய் பல்லவியை (சத்யா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சத்யா, கடலுக்கு செல்வதை நிறுத்திவிட்டு வேறு வேலைக்கு போகும்படி ராஜூவை வற்புறுத்துகிறார்.

26
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா

ஆனால், அதையெல்லாம் கேட்காத ராஜூ கடலுக்கு சென்று பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்து அந்த நாட்டு கடற்படை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுகிறார். இதையடுத்து அவர் திரும்பி வந்தாரா, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் படத்தோட கதை. தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்தப் படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.10 கோடி குவித்துள்ளது.

36
சோபிதா துலிபாலா - நாக சைதன்யா

ஆனால், இதற்கு முன்னதாக நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான லவ் ஸ்டோரி படத்தின் முதல் நாள் வசூலை விட இந்தப் படம் குறைவாகவே வசூல் குவித்திருக்கிறது. தமிழில் இது போன்று எத்தனையோ கதைகள் வந்த நிலையில் இந்தப் படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் கூட சாய் பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலேயும் நமோ நமசிவாய பாடலுக்கு வியக்க வைக்கும் வகையில் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்.

46
பிரதமர் மோடிக்கு புத்தகம் கொடுத்த நாகர்ஜூனா குடும்பத்தினர்

இந்த நிலையில் தான் நாக சைதன்யா தனது படம் ரிலீசான நாளன்று குடும்பத்தினருடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு நாகேஸ்வர ராவ் பற்றிய புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார். சைதன்யா தனது மனைவி சோபிதா துலிபாலா, அப்பா நாகார்ஜுனா மற்றும் அம்மா அமலா அக்கினேனி ஆகியோருடன் டெல்லிக்கு சென்று மோடியை சந்தித்து பேசியிருக்கிறார்.

56
பிரதமர் மோடிக்கு புத்தகம் பரிசு

இது தொடர்பான புகைப்படத்தை எம்பி ஷபரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, அக்கினேனி குடும்பத்தினர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

66
பிரதமர் மோடிக்கு பரிசு கொடுத்த சோபிதா துலிபாலா

கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் முதல் முறையாக அவரது நடிப்பில் தண்டேல் படம் வெளியானது. இதற்காக தனது கணவருக்கு சோபிதா வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் இப்போது தன்னுடைய கணவர் மற்றும் மாமனார், மாமியார் உடன் இணைந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு பரிசும் கொடுத்திருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories