Published : Feb 08, 2025, 08:59 AM ISTUpdated : Feb 08, 2025, 09:04 AM IST
அஜித் - த்ரிஷா நடிப்பில் பிப்ரவரி 6-தேதி ரிலீசான விடாமுயற்சி திரைப்படம், இரண்டாவது நாளிலேயே வசூலில் 65 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக சானில்க் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் முதல்முறையாக இணைந்து நடித்த திரைப்படம் 'விடாமுயற்சி'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதன் பிரதிபலிப்பாக இரண்டாவது நாளில் விடாமுயற்சி திரைப்படம் வசூலில் அதிரடி சரிவை சந்தித்துள்ளதாக திரைப்பட வசூல் குறித்து தெரிவிக்கும் சானில்க் தளம் தற்போது அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் ஆக்சன் திரில்லர் ஆன 'விடாமுயற்சி' திரைப்படம் இரண்டாவது நாள் வசூலில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது.
24
65 சதவீத சரிவை சந்தித்த விடாமுயற்சி
சானில்க் மதிப்பீட்டின்படி, விடாமுயற்சி முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும் போது 2-ஆவது நாளில் 65 சதவீதம் குறைந்துள்ளது. இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்திய அளவில் 8.75 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள், மற்றும் இந்த படம் வெளியான அன்றே திருட்டுத்தனமாக ஆன்லைனில் கசிந்தது போன்றவை இந்த படத்தின் வசூலை பாதித்திருக்கலாம் என கூறப்படுத்திகிறது.
பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இப்படத்தின் இந்திய அளவிலான வசூல் ரூ .34.75 கோடி. தமிழில் 33.9 கோடியும் , தெலுங்கில் ₹ 85 லட்சமும் அடங்கும். இதில் பாதியை கூட இரண்டாவது நாளில் விடாமுயற்சி எட்டவில்லை. 2-ஆவது நாள் வசூல் குறித்து அறிவித்துள்ள சானிக்ல் தமிழில் 8.4 கோடியும், தெலுங்கில் 35 லட்சமும் வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
44
விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகர்கள்
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, இரண்டாவது நாளே அஜித்தின் இந்த திரைப்படம் இப்படி மோசமான சரிவை வசூல் சரிவை சந்தித்துள்ளது பட குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ஆரவ் மற்றும் ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் தன்னுடைய இசையால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார்.