
Suriyas Retro Movie OTT Rights Acquired by Netflix : அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த படங்கள் ஏராளம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று எல்லா மொழியிலும் இது போன்று படங்கள் உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைக்கு வந்தது. ஆனால், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வரையில் தான் வசூல் குவித்திருந்தது. இதன் மூலமாக 'கங்குவா' படத்தால் ஏற்பட்ட நஷ்டம் சுமார் 250 கோடி ரூபாய் என்று தகவல் வெளியானது. கங்குவா படத்தின் 2ஆம் பாகமும் உருவாகும் என்று கங்குவா வெளியான போதே அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கங்குவாவிற்கு ஆதரவாக பேசியிருந்தனர். இந்த நிலையில் இப்போது சூர்யா ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.
அறிவிப்பிலிருந்தே 'ரெட்ரோ' படம் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் அப்டேட்கள் அனைத்தும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் என்பதால், படம் குறைந்தபட்ச உத்தரவாதம் அளிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படம் இந்த ஆண்டு வெளியாகும்.
ரெட்ரோ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
மே 1 ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரமாக இருக்கின்றனர். இந்த் நிலையில் தான் ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 80 கோடி ரூபாய்க்கு இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னதாக வந்த கங்குவா படத்தை கூட அமேசான் ரூ.100 கோடி கொடுத்து வாங்கிருந்தது. அப்படியிருக்கும் போது கங்குவா படத்தை விட ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் ரூ.80 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பது சற்று வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது.
திரையரங்குகளில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால், 'ரெட்ரோ' படம் சூர்யாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று சூர்யா தனது 45ஆவது படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும், நட்டி, லப்பர் பந்து சுவாசிகா, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு, ஷிவதா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். டிரீம் வாரியர்ஸ் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சாய் அபயங்கார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.