மிக குறுகிய காலத்தில் பிஸியான காமெடி நடிகராக மாறியவர் ரெடின் கிங்ஸ்லி. திருமணமே வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்த இவர், ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்ற சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்தார். இதை தொடர்ந்து, இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் நடந்தது.
ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா:
திருமணத்திற்கு பின்னர் இவர்களின் புகைப்படம் வெளியான போது கூட, இது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமோ? என பலர் நினைத்த நிலையில், பின்னர் இது ரீல் கல்யாணம் கிடையாது ரியல் கல்யாணம் என்பதை உறுதி செய்தனர். திருமணத்திற்கு பின்னர் சங்கீதா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி; சங்கீதாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - போட்டோஸ்!
விமர்சனங்களை எதிர்கொண்ட சங்கீதா:
சங்கீதாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் தனக்கு மகள் என யாரும் இல்லை என்பதை அறிவித்தார். அதே போல் இந்த திருமணம் மூலம் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார் சங்கீதா. பணத்துக்காக தான் ரெடின் கிங்ஸ்லியை, இவர் திருமணம் செய்து கொண்டதாக சிலர் விமர்சித்த நிலையில், உண்மையான காதலுக்காக மட்டுமே இந்த திருமண வாழ்க்கையில் இணைந்தேன். பணத்துக்காக ஒருவரை திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நிலைக்காது என்பது போலவும் பேசி இருந்தார்.
சங்கீதாவின் வளைகாப்பு:
46 வயதில் திருமணம் செய்து கொண்டாலும், இளமை பொங்க இருவரும் சிறகடித்து கொண்டிருக்கின்றனர். அதே போல், திருமணம் ஆன ஒரு வருடத்திற்கு பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சங்கீதா அறிவித்தார். ஏற்கனவே சங்கீதாவுக்கு பூச்சூடல் விழா எளிமையாக நடந்து முடிந்த நிலையில், தற்போது ரெடின் கிங்ஸ்லி பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ள நிலையில் இதில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி உள்ளனர்.
46 வயதில் கர்ப்பம்; வயிற்றில் குழந்தையோடு நடிகை சங்கீதா நடத்திய க்யூட்டான பிரக்னன்ஸி போட்டோஷூட்
வைரலாகும் வளைகாப்பு புகைப்படம்:
இதுகுறித்த சில புகைப்படங்களும் வெளியாகி உள்ள நிலையில்... ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக இவர் நடிப்பில் ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் வெளியான நிலையில்... இவரின் கைவசம் சுமார் அரை டஜன் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஒரு டான்சராக அறிமுகம் ஆகி, பின்னர்... நெல்சன் திலீப் குமார் மூலம் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் ரெடின் கிங்ஸ்லி என்பது குறிப்பிடத்தக்கது.