இயக்குனராக அறிமுகமாகும் ஹிருத்திக் ரோஷன்; முதல் பட பட்ஜெட்டே 700 கோடியா?
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஹிருத்திக் ரோஷன், தான் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளதால், ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஹிருத்திக் ரோஷன், தான் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளதால், ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
Hrithik Roshan Debut as Director : ஏராளமான தடங்கல்களுக்கும், விவாதங்களுக்கும் பிறகு, பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ திரைப்படமான கிரிஷ் 4 மீண்டும் வருகிறது. தயாரிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான சிக்கல்களுக்குப் பிறகு, திரைப்படத்திற்கு ஒரு இயக்குனர் கிடைத்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, ஹிருத்திக் ரோஷன் தான். அவர் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். கிரிஷ் 4 படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் ராகேஷ் ரோஷன் இணைந்து தயாரிக்கின்றனர்.
கிரிஷ் 4 பட பட்ஜெட்
கிரிஷ் 4 திரைப்படத்தை தயாரிக்க தற்போதுள்ள பிளான் படி பார்த்தால், சுமார் 700 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே பல தயாரிப்பு நிறுவனங்களும் இந்த திரைப்படத்தை எடுக்க தயங்குவதாக பாலிவுட் ஹங்கமா ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தடைகள் அனைத்தையும் தாண்டி தற்போது கிரிஷ் 4 தொடங்கப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்... கிரிஷ் 4 படத்தின் ஷூட்டிங் தள்ளி வைப்பு : ரூ.700 கோடி பட்ஜெட்டை கேட்டதும் தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்!
கிரிஷ் பிரான்சைஸ்
ஹிருத்திக் ரோஷன் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான 'கோயி மில் கயா' என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்தின் மூலம் ராகேஷ் ரோஷன் கிரிஷ் திரைப்பட வரிசையைத் தொடங்கினார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த கிரிஷ் திரைப்படம் வெளியானது. பின்னர் 2013 ஆம் ஆண்டு ஹிருத்திக், பிரியங்கா, விவேக் ஓபராய், கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கிரிஷ் 3 வெளியானது.
இயக்குனராகும் ஹிருத்திக் ரோஷன்
இதற்கிடையில், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'ஃபைட்டர்'. தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்த இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். அனில் கபூரும் ஃபைட்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை நடிகராக கலக்கி வந்த ஹிருத்திக் ரோஷன், தற்போது கிரிஷ் 4 படம் மூலம் இயக்குனராக களமிறங்கி உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... ரஜினிக்கு போட்டியாக வரும் ரித்திக் ரோஷன்: கூலியுடன் சண்டை போடும் வார் 2: எப்போது ரிலீஸ் தெரியுமா?