பிரபல தொழிலதிபர் மகளுடன் பிரபாஸூக்கு திருமணமா? 45 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்?

Published : Mar 28, 2025, 12:49 PM IST

Prabhas Marriage Rumours with Businessman Daughter in Tamil : பாகுபலி படம் மூலமாக பிரலமான பிரபாஸூக்கும், பிரபல தொழிலதிபர் மகளுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

PREV
16
பிரபல தொழிலதிபர் மகளுடன் பிரபாஸூக்கு திருமணமா? 45 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்?

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா டகுபதி ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் பாகுபலி. இந்தப் படம் மூலமாக பான் இந்திய ஸ்டாராக பிரபலமானவர் தான் பிரபாஸ். பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து 2ஆம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பு பெற்றது.

26
Prabhas Marriage Rumours with Businessman Daughter in Tamil

பாகுபலி படத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆன நிலையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி என்று இருவரும் மறுப்பு தெரிவித்தனர். பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்கா பெரியளவில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

36
Prabhas Marriage Rumours with Businessman Daughter in Tamil

இந்த நிலையில் தான் இப்போது பிரபாஸூக்கும், பிரபல தொழிலதிபரின் மகளுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. பிரபாஸ் திருமணம் செய்யவிருக்கும் பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு நியூஸ் 18 செய்தியில், பிரபாஸின் மறைந்த மாமா அரசியல்வாதி கிருஷ்ணன் ராஜுவின் மனைவி ஷியாமளா தேவி திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பிரபாஸின் திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியதும், சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய வட்டாரங்கள் அதை திட்டவட்டமாக மறுத்தன. 

46
Prabhas Marriage Rumours with Businessman Daughter in Tamil

பிரபாஸின் திருமண செய்திகளை அவரது குழு மறுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "இது ஒரு போலி செய்தி. தயவுசெய்து இதைப் புறக்கணிக்கவும்," என்று அவர்கள் கூறினர்.

இதற்கு முன்பு பிரபாஸின் பெயர் நடிகை அனுஷ்கா ஷெட்டியுடன் இணைக்கப்பட்டது, அவர் 'பாகுபலி' போன்ற படங்களில் அவருடன் இணைந்து நடித்தார். இருப்பினும், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் இந்த செய்திகளை மறுத்தனர்.

56
Prabhas Marriage Rumours with Businessman Daughter in Tamil

பிரபாஸ் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ​​அவரது பெயர் நடிகை கீர்த்தி சனோனுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், தான் யாரையும் டேட் செய்யவில்லை என்பதை பிரபாஸ் தெளிவுபடுத்தினார்.

 

66
Prabhas Marriage Rumours with Businessman Daughter in Tamil

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக 'கல்கி 2898 AD' படம் வெளீயானது. தற்போது 'தி ராஜா சாப்', 'கன்னப்பா', 'சலார் பார்ட் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories