TRPயில் மளமளவென முன்னேறிய அய்யனார் துணை; இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
விஜய் டிவியில் நேரம் மாற்றத்தால் டிஆர்பியில் பாக்கியலட்சுமி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு அய்யனார் துணை சீரியல் டாப் 10 ரேஸில் இணைந்துள்ளது.
விஜய் டிவியில் நேரம் மாற்றத்தால் டிஆர்பியில் பாக்கியலட்சுமி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு அய்யனார் துணை சீரியல் டாப் 10 ரேஸில் இணைந்துள்ளது.
Top 10 Tamil Serial TRP Rating : சீரியல்களின் வெற்றி தோல்வி, அதற்கு கிடைக்கும் டிஆர்பியை வைத்து தான் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் டிஆர்பி பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 11வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல் சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அதன் பட்டியலை பார்க்கலாம்.
டிஆர்பியில் முன்னேறிய அய்யனார் துணை
டாப் 10 சீரியல்களில் 10வது இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியல் 6.41 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்ததாக 9-வது இடத்தை விஜய் டிவியின் புத்தம் புதிய சீரியலான அய்யனார் துணை பிடித்துள்ளது. டாப் 10 ரேஸில் இந்த சீரியல் முதன்முறையாக நுழைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலின் நேர மாற்றம் தான். கடந்த வாரம் முதல் 8.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... லீக் ஆன அந்தரங்க வீடியோ; வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!
பின்னுக்கு தள்ளப்பட்ட பாக்கியலட்சுமி
அதற்கு முன்னதாக 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 7 மணிக்கு ஒளிபரப்பாகி உள்ளதால் அதன் டிஆர்பி மளமளவென குறைந்துள்ளது. அந்த சீரியல் 5.37 டிஆர்பி ரேட்டிங் உடன் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 8-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அந்த சீரியலுக்கு 7.00 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. 7 மற்றும் 6-வது இடத்தில் சன் டிவியின் அன்னம் மற்றும் எதிர்நீச்சல் 2 சீரியல்கள் உள்ளன. அவற்றிற்கு 7.13 மற்றும் 7.50 டிஆர்பி கிடைத்திருக்கிறது.
மீண்டும் டாப் 5-ல் சிறகடிக்க ஆசை
முதல் 5 இடங்களில் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து உள்ளன. 5-வது இடம் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்துள்ளது. கடந்த வாரம் 6வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி உள்ளது. இந்த சீரியலுக்கு 8.18 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதையடுத்து 4-வது இடத்தில் உள்ள மருமகள் சீரியல் 8.28 புள்ளிகளை பெற்றுள்ளது. கடந்த வாரம் 2ம் இடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டு 9.46 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோல் கடந்த வாரம் 3ம் இடத்தில் இருந்த கயல் ஒரு இடம் முன்னேறி 9.72 டிஆர்பியை பெற்றுள்ளது. வழக்கம்போல் சிங்கப்பெண்ணே சீரியல் 9.93 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இதையும் படியுங்கள்... Pandian Stores: சைலண்டாக மாப்பிள்ளை பார்த்து - நிச்சயதார்த்த தேதி குறித்த பாண்டியன்! அரசி சொன்ன வார்த்தை?