Suhasini Maniratnam: காது கேட்கல; காசநோயால் பாதிக்கப்பட்ட நடிகை சுஹாசினி! வெளியே சொல்லாதது ஏன்?
நடிகை சுஹாசினி காச நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்ததாக கூறியுள்ளார். இதனை பல வருடங்கள் ஏன் வெளியே சொல்லாததன் காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.
நடிகை சுஹாசினி காச நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்ததாக கூறியுள்ளார். இதனை பல வருடங்கள் ஏன் வெளியே சொல்லாததன் காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் துளியும் கவர்ச்சி காட்டாமல், ஜெயித்த ஹீரோயின்களில் ஒருவர் தான் சுஹாசினி. உலக நாயகன் குடும்பத்தில் இருந்து, நடிக்க வந்த சுஹாசினி, 1980-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். ரஜினிகாந்த், சத்யராஜ், உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஹீரோயினாக இருக்கும் போதே, கதை மற்றும் டயலாக் ரைட்டிங்கில் அதிக ஆர்வம் காட்டிய சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய படங்களில் பணியாற்றிய போது அவரை காதலிக்க துவங்கினார். இந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்திலும் முடிந்தது. அதன்படி, கடந்த 1988-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட சுஹாசினி தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
61 வயதிலும்... 25 வயது ஹீரோயின் போல் பொங்கும் இளமை! நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் போட்டோ ஷூட்!
இந்த தம்பதிக்கு, தற்போது நந்தன் என்கிற மகனும் உள்ளார். சுஹாசினி மற்றும் மணிரத்னம் இருவருமே திரையுலகை சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களுடைய மகன் நந்தன் திரையுலகின் வெளிச்சம் படாமல் ஒதுங்கியே உள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு இயக்குநராகவோ அல்லது நடிகராகவோ வர விரும்பினால் அது அவரின் விருப்பம் என்றும், அதில் எங்களின் தலையீடு இருக்காது என்று, ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சுஹாசினி, நடிப்பை தாண்டி இவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த இந்திரா என்கிற திரைப்படத்தை இயக்குனராகவும் மாறியவர். தன்னுடைய கணவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்திலும் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில், நடிகை சுஹாசினி தனக்கு இருந்த காச னாய் குறித்து முதல் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 6 வயதில் இருந்தே காச நோய் இருந்தது. பின்னர் சிகிச்சை எடுத்த பின்னர், சிறு வயதியிலேயே அது சரியாகியது. இதோடு அந்த பிரச்சனை முடிந்து விட்டது என நினைத்த நிலையில், தனக்கு 36 வயது இருக்கும் போது மீண்டும் காச நோயால் பாதிக்கப்பட்டேன்.
இதனால் என்னுடைய எடை அதிகரித்தது. காதும் சரியாக கேட்காமல் போனது.சுமார் 6 மாதங்கள் சிகிச்சை எடுத்த பின்னர் காச நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்தேன். அப்போது இது பற்றி வெளியே சொன்னால் என்னக்கு கௌரவ குறைச்சல் என நினைத்தேன். அதனால் தான் வெளியே சொல்லவில்லை. இப்போது இது பற்றி சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன். என கூறியுள்ளார்.