முதல் நாளே விஜய் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய எம்புரான்!

Published : Mar 28, 2025, 09:59 AM ISTUpdated : Mar 28, 2025, 04:59 PM IST

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள எம்புரான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
முதல் நாளே விஜய் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய எம்புரான்!

Empuraan beat Leo Movie Box Office Record : மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் லூசிபர். அப்படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி இருந்தார். லூசிபர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திலும் மோகன்லால் உடன் மஞ்சுவாரியர், சூரஜ், டொவினோ தாமஸ், கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

24

வசூலில் மாஸ் காட்டும் எம்புரான்

எம்புரான் திரைப்படத்தை மலையாளம் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்துள்ளனர். மார்ச் 27ந் தேதி ரிலீஸ் ஆன எம்புரான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. லூசிபர் அளவுக்கு இல்லாவிட்டாலும் படம் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உள்ளதாக பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. அதுமட்டுமின்றி இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடி வருகிறது.

இதையும் படியுங்கள்... மோகன்லால்- பிரித்திவிராஜின் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம்! திரையரங்கில் அலைமோதும் கூட்டம் !

34

முதல் நாள் வசூல் எவ்வளவு?

முன்பதிவிலேயே எம்புரான் படம் மாஸ் காட்டிய நிலையில், இப்படம் முதல் நாள் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. "Empuran" sets a record on the first day இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மலையாள சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை எம்புரான் படைத்துள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் 19 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம். அதேபோல் தமிழ்நாட்டில் ரூ.1.94 கோடியும், தெலுங்கில் ரூ.1.2 கோடியும் வசூலித்து உள்ளது.

44

லியோ சாதனையை முறியடித்த எம்புரான்

கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படமாக தளபதி விஜய்யின் லியோ படம் இருந்து வந்தது. அப்படம் அங்கு முதல் நாளில் ரூ.12 கோடி வசூலித்து இருந்தது. இந்த சாதனையை எம்புரான் படம் முறியடித்துள்ளது. இப்படம் அங்கு மட்டும் ரூ.19 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படமாக எம்புரான் மாறி இருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... Empuraan Review : அடிபொலியாக உள்ளதா எம்புரான்? முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories