47 வயதில் அப்பாவாகும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குட் நியூஸை கியூட்டாக அறிவித்த சங்கீதா!

Published : Dec 26, 2024, 11:37 AM ISTUpdated : Dec 26, 2024, 02:56 PM IST

கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட சங்கீதா - ரெடின் கிங்ஸ்லி ஜோடி கூடிய விரைவில் பெற்றோர் ஆக உள்ள செய்தியை தற்போது அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

PREV
15
47  வயதில் அப்பாவாகும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குட் நியூஸை கியூட்டாக அறிவித்த சங்கீதா!
Actor Redin Kingsley

டான்சர், தொழிலதிபர், காமெடி நடிகர் என கலக்கி கொண்டிருப்பவர்  ரெடின் கிங்ஸ்லி. ஆரம்பத்தில் நடிக்க ஆர்வம் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் 40 வயதுக்கு மேல் தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இவருக்கு தான் இயக்கிய படங்களில் வாய்ப்பு வழங்கியது இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தான். 

25
Vettai Mannan Movie:

சிம்புவை வைத்து நெல்சன் முதல் முறையாக இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் தான், நடிகராக அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி. துரதிஷ்டவசமாக இந்த படம், கிடப்பில் போடப்பட்ட நிலையில், நடிகை நயன்தாராவை வைத்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து நெல்சன் இயக்கிய 'டாக்டர்' முதல் கடைசியாக வெளியான ஜெயிலர் வரை தன்னுடைய தனித்துவமான காமெடியால் படத்திற்கு வலு சேர்த்தார்.

தீபக் குடும்பத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது யார் தெரியுமா? பாச மழையில் நனைந்து போட்டியாளர்!

35
Actor Redin Kingsley Movies

தற்போது இவரின் கைவசம், 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ள நிலையில், யோகி பாபு, சூரி, ரோபோ ஷங்கர் வரிசையில் ஐவரும் கதையின் நாயகனாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி கடந்த சில வருடங்களாக, சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு சங்கீதாவுக்கும் - ரெடின் கிங்ஸ்லிக்கும் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியான போது, ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்றே ரசிகர்கள் நினைத்த நிலையில்...  இது நிஜ திருமணம் என்பதை நிரூபிக்கும் விதமாக பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

45
Redin Kingsley and Sangeetha marriage

46 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல், முரட்டு சிங்கிளாக இருந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நடிகையை திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம், தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை சங்கீதா அறிவித்துள்ளார். இதுகுறித்து கியூட்டான ரொமான்டிக் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். 

Kayal Serial: சன் டிவி 'கயல்' சீரியல் படைத்த முக்கிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

55
Serial Actress Sangeetha

கடந்த 2 மாதத்திற்கு முன்னர், சங்கீதா சன் டிவியில் நடித்து வந்த 'ஆனந்த ராகம்' தொடரில் இருந்து விலகிய போதே... அவர் கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் அப்போது இருவருமே இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில், தற்போது குழந்தை பிறக்க உள்ளதை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சங்கீதாவுக்கு மகள் ஒருவர் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த தகவலை சங்கீதா மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories