தளபதி ஸ்டைலில்; உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்!

First Published | Dec 26, 2024, 9:43 AM IST

Sivakarthikeyan Meet Gukesh : உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிராண்ட்மாஸ்டர் குகேஷை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், அவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

Gukesh, Sivakarthikeyan

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன அமரன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படங்களின் பட்டியலில் அமரன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியது. ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.

Gukesh Meet Sivakarthikeyan

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தற்காலிகமாக எஸ்.கே.23 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வஸந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... உலக செஸ் சாம்பியனுக்காக மல்லுகட்டும் தமிழகம் Vs ஆந்திரா: யார் இந்த குகேஸ்?

Tap to resize

Gukesh Fan of Sivakarthikeyan

இதுதவிர சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள எஸ்.கே, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க, அதர்வாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Sivakarthikeyan gifted a Watch to Gukesh

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் சந்தித்து அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, காஸ்ட்லியான வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார். குகேஷ் சிறு வயதில் இருந்தே சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகராம். இதை அறிந்த சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக அவரை சந்தித்து வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. முன்னதாக கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு விஜய் ஒரு வாட்சை பரிசாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள்... செஸ் மட்டுமல்ல இதிலும் இவர் 'கிங்'; துளியும் பயமின்றி பங்கி ஜம்ப் செய்த குகேஷ்!

Latest Videos

click me!