விஜயகாந்த் பட ரீமேக்கில் போட்டிபோட்டு நடித்து வசூல் வேட்டையாடிய ரஜினி, கமல் - என்ன படம் தெரியுமா?

First Published | Dec 26, 2024, 8:52 AM IST

தமிழில் விஜயகாந்த் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படத்தின் இந்தி மற்றும் மலையாள ரீமேக்கில் ரஜினி, கமல் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆனது.

Kamal, Rajini, Vijayakanth

1980-களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வந்தனர். இவர்களுக்கு போட்டியாக கோலோச்சிய மற்றொரு மாஸ் ஹீரோ என்றால் அது விஜயகாந்த் தான். சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார் விஜயகாந்த். இவர் தனக்கென ஒரு தனி கொள்கையையும் வைத்திருந்தார். அதன்படி எத்தனை கோடி கொடுத்தாலும் தமிழ் தவிர மற்றமொழி படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

sattam oru iruttarai

ஆனால் அவரின் சமகால ஹீரோக்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு படங்களில் நடித்து வந்தனர். ஆனால் விஜயகாந்த் கடைசி வரை தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்கவே இல்லை. அந்த காலகட்டங்களில் தமிழ் மொழியில் ஹிட்டான படங்களை பிறமொழிகளில் அதிகளவில் ரீமேக் செய்து வந்தனர். அப்படி விஜயகாந்தின் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ரஜினி, கமல் நடித்து அப்படங்களும் வெற்றிபெற்ற சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... விஜய்யை பார்க்க ஓடோடி வந்த ரஜினிகாந்த்: ரஜினியை பார்த்ததும் விஜய என்ன செய்தார் தெரியுமா?

Tap to resize

Sattam oru iruttarai Hindi Remake

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1981-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தில் விஜயகாந்த் தான் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழில் சக்கைப்போடு போட்டதை அடுத்து இதனை இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்ய முடிவெடுத்தனர். சட்டம் ஒரு இருட்டறை படம் ரிலீஸ் ஆனபோது இப்படி ஒரு நமக்கு கிடைக்கவில்லையே என ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஃபீல் பண்ணினார்களாம்.

Sattam oru iruttarai Malayalam Remake

அப்படத்தை ரீமேக் செய்யும் தகவல் அறிந்த இருவரும் அதில் நடிக்க உடனடியாக ஓகே சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து மலையாளத்தில் கமல்ஹாசனை வைத்தும், இந்தியில் ரஜினிகாந்தை வைத்தும் அப்படத்தை ரீமேக் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தப் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூலை வாரிக்குவித்திருக்கிறது. ஒரே படம் 3 முன்னணி ஹீரோக்கள் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... “திருமணமான முதல் நாளே அது தெரிஞ்சுடுச்சு.. ” வாணி கணிபதி உடனான விவாகரத்து குறித்து கமல் ஓபடன் டாக்!

Latest Videos

click me!