சீரியல் நடிகை சங்கீதாவுக்கு குழந்தை பிறந்தாச்சு; 47 வயதில் தந்தையான ரெடின் கிங்ஸ்லி!
சீரியல் நடிகை சங்கீதாவும், நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு தற்போது அழகிய குழந்தை பிறந்துள்ளது.
சீரியல் நடிகை சங்கீதாவும், நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு தற்போது அழகிய குழந்தை பிறந்துள்ளது.
Redin Kingsley Wife Sangeetha Blessed With a Baby : சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் டான்சராக தன்னுடைய கெரியரை தொடங்கினாலும், போகப் போக நடிகராக மாறிவிட்டார். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இவர் நடித்த டோனி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நெல்சன் இயக்கும் படங்களில் மெயின் காமெடியனாக கலக்கி வந்தார் ரெடின் கிங்ஸ்லி. 45 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த ரெடினுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் ஆனது.
கர்ப்பமாக இருந்த ரெடின் கிங்ஸ்லி மனைவி
அவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை சங்கீதாவுக்கு அப்போது வயது 44. இருவரும் திடீரென கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வந்த ரெடின் கிங்ஸ்லி கடந்த ஆண்டு தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். இதையடுத்து கடந்த மாதம் சங்கீதாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. அதில் ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... 46 வயதில் நிறைமாத நிலவாக சீரியல் நடிகை சங்கீதா; வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த ரெடின் கிங்ஸ்லி!
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு
இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 47 வயதில் தந்தை ஆன மகிழ்ச்சியில் பூரித்துப் போய் உள்ளார் கிங்ஸ்லி. அவர் தன்னுடைய மகளை கையில் ஏந்தி கொஞ்சியபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள சங்கீதா - ரெடின் கிங்ஸ்லி ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கோடி கோடியாய் சம்பாதிக்கும் ரெடின் கிங்ஸ்லி
ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் உள்ளிட்ட சில சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார். இதுதவிர விஜய்யின் மாஸ்டர் போன்ற சில படங்களிலும் சின்ன சின்ன ரோலில் நடித்திருக்கிறார் சங்கீதா. மறுபுறம் அவரது கணவர் ரெடின் கிங்ஸ்லி நடிகராக மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். அரசு பொருட்காட்சிகளை டெண்டர் எடுத்து நடத்தி வரும் ரெடின் கிங்ஸ்லி அதன் வாயிலாக கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 46 வயதில் கர்ப்பம்; வயிற்றில் குழந்தையோடு நடிகை சங்கீதா நடத்திய க்யூட்டான பிரக்னன்ஸி போட்டோஷூட்