Lal Salaam OTT: புதிய காட்சிகளுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'லால் சலாம்'? வெளியான அப்டேட்!

Published : Apr 02, 2025, 06:41 PM ISTUpdated : Apr 02, 2025, 06:43 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன 'லால் சலாம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
15
Lal Salaam OTT: புதிய காட்சிகளுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'லால் சலாம்'? வெளியான அப்டேட்!

ஸ்போட்ஸ் டிராமாக வெளியான லால் சலாம்:

ஹாரர், த்ரில்லர், ரொமாண்டிக், திரைப்படங்களை தாண்டி சமீப காலமாக உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் பயோ பிக், மற்றும் ஸ்போர்ட்ஸ் டிராமா போன்ற திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் லால் சலாம்.
 

25

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கிராமத்தில்... இளைஞர்கள் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டில் கூட, அரசியல் உள்ளது என்கிற அழுத்தமான கதைக்களத்துடன்   ரிலீசானது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேர்த்தியாக இயக்கி இருந்தாலும் கதையில் இருந்த சொதப்பல்கள் இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் என இரண்டு ஹீரோக்கள் நடித்திருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா, தான்யா, செந்தில், தம்பி ராமையா, போன்ற பலர் நடித்திருந்தனர்.

Lal Salaam: தொலைந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்ததால் மீண்டும் சென்சார் செய்யப்பட்ட லால் சலாம்! ஓடிடி ரிலீஸ் எப்போது?

35

லால் சலாம் படத்தின் அதிர்ச்சி தோல்வி:

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற ரோலில்  நடித்திருந்தார். ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்திருந்ததால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த படம் அதீத எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இடம் பெற்ற சில பாடல்கள் மட்டுமே ரசிக்கும் படி இருந்தது.

45

டிமாண்ட் செய்த நிறுவனங்கள்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தின் தோல்வி குறித்து கூறியபோது, "இப்படத்தில் இடம்பெற வேண்டிய சில முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதாகவும், மீண்டும் ஒரு சில காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி இந்த படத்தை நிறைவு செய்ததாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனை குறித்த பேச்சு வார்த்தை நடந்தபோது, ஐஸ்வர்யாவிடம் தொலைந்து போன ஹார்ட் டிஸ்கை தேடி உங்களுடைய படத்தில் அது குறித்த புதிய காட்சிகளை இணைத்தால் மட்டுமே வாங்கி கொள்வோம் என சில நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாக்கின.

ஓடிடியில் ரிலீசாகும் முன்பே டிவியில் ஒளிபரப்பாக உள்ள லால் சலாம் - எப்போ தெரியுமா?

55

ஏப்ரல் 4-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தொலைந்து போன ஹார்ட் டிஸ்கை கண்டுபிடித்து, அந்த காட்சிகளை இணைத்து மீண்டும் இப்படத்தை வெளியிடுவோம் என கூறியிருந்தார். அந்த ஹார்ட் டிஸ்க் மீண்டும் கிடைத்து விட்டதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி ஏப்ரல் நான்காம் தேதி, 'லால் சலாம்' திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் இப்படத்தில் புதிய காட்சிகள் உடன் திரைப்படம் ஒளிபரப்பாகுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories