நான் ஏன் இப்படிப்பட்டவர் கூட டேட்டிங் பண்ணனும்? திவ்ய பாரதியின் பளார் பதிலடி!

ஜிவி பிரகாஷ் உடன் நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று? பளீச் என பேசி கிசுகிசுவுக்கு பளார் பதிலடி கொடுத்துள்ளார் 'பேச்சிலர்' பட நடிகை திவ்யபாரதி.
 

பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி:

'முப்பரிமாணம்' என்கிற படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஃபேண்டா பாட்டில் அழகி நடிகை திவ்யபாரதி. இந்தப் படத்திற்கு பிறகு, ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து இவர் நடித்த 'பேச்சிலர்' திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்தது. ஜிவி பிரகாஷுடன் இப்படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தனர். 

'கிங்ஸ்டன்' படத்திலும் ஜிவிக்கு ஜோடி போட்ட திவ்ய பாரதி:

இதன் பின்னர் சமீபத்தில், ஜிவியின் 25-ஆவது படமாக ரிலீஸ் ஆன 'கிங்ஸ்டன்' படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் திவ்ய பாரதி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜிவி-யின் கடல் சாகசமாக வெளியான 'கிங்ஸ்டன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் இதோ!
 


Actress Divya

ஜிவி - சைந்தவி விவாகரத்து:

இந்த நிலையில் தான் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், அதனால் தான் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிந்தார் என்றும் சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது. இது குறித்து ஏற்கனவே இருவரும் விளக்கம் கொடுத்திருந்தனர்.  இந்த நிலையில் தான் மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் திவ்யபாரதி டேட்டிங்கில் இருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவ தொடங்கிறது.

திருமணம் ஆனவருடன் நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும்:

இதற்க்கு மீண்டும் திவ்ய பாரதி விளக்கம் கொடுத்துள்ளார். "இதுபற்றி அவர் கூறும் பொது ஜிவியின் குடும்ப பிரச்சனைக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். இது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையிலான பிரச்சனை. மேலும், திருமணமான ஒருவருடன், நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும்? அது எனக்கு அவசியமும் இல்லை. பொதுவாக இப்படியொரு வதந்திகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றாலும் கூட எல்லை மீறிய வதந்திகளுக்கு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நான் நடந்து கொள்ளமாட்டேன். இது தான் எனது முதலும், கடைசியுமான அறிக்கை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!

ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி விவாகரத்து விவகாரம்:

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பள்ளி பருவத்தில் இருந்தே உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், 11 ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் மனம் ஒத்து விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. விரைவில் இருவருக்கும் விவாகரத்து வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!