மனோஜ் உயிரிழந்த அன்று நடந்தது என்ன?
மனோஜ் தனது உடலை பாதுகாக்கவில்லை. அவருக்கு இளம் வயதில் இருந்தே சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. மேலும், கடந்த சில வருடங்களாக அவர் நிறைய ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதுதான் அவருக்கு இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் தான் ஆகியிருக்கிறது.
மனோஜ் உயிரிழந்த நாளன்று பிற்பகல் சாப்பிட்டு விட்டு தூங்கியிருக்கிறார். அவர் எப்போதும் சாப்பிட்ட பின் தூங்குவது வழக்கம். ஆனால், அன்று அவர் தூங்கி எழவில்லை. அப்போது தான் அவர் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இதை மனோஜின் உறவினர் தான் என்னிடம் கூறினார். இயக்குநராக மனோஜ் ஆசைப்படும் போது, அதெல்லாம் வேண்டாம் என்று பாரதிராஜா மறுத்திருக்கிறார். அதற்கு காரணம், தான் பட்ட கஷ்டத்தை தனது மகனும் படக் கூடாது என்பதற்கு தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். இது முக்கிய முழுக்க அவர் அவர் மனோஜ் மீது வைத்திருந்த பாசத்தின் வெளிப்பாடு மட்டுமே தவிர, அவரின் ஆசையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.