விஜய்யை விட கமலுக்கு தான் மவுசு; ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான டாப் 5 தமிழ் படங்கள்!

Published : Apr 02, 2025, 02:47 PM IST

தளபதி விஜய் நடித்த ஜன நாயகன் முதல் கமல்ஹாசனின் தக் லைஃப் வரை ஓடிடியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
விஜய்யை விட கமலுக்கு தான் மவுசு; ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான டாப் 5 தமிழ் படங்கள்!

Tamil Movies sold for Highest Price in OTT : ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்த பின்னர், அவை படங்களை போட்டி போட்டு வாங்கி வருகின்றன. முன்பெல்லாம் ஒரு படத்தின் ஹெச்.டி பிரிண்ட் வெளிவர வேண்டும் என்றால் அதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடியில் ஹெச்.டியில் வந்துவிடுகிறது. இதனால் ஓடிடியில் சப்ஸ்கிரைப் செய்து புதிய படங்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

26

5. தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி தியேட்டரில் 450 கோடிக்கு மேல் வசூலித்த கோட் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.112 கோடி கொடுத்து வாங்கி இருந்தது.

36

4. கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. ஆனால் அதற்குள் இப்படத்தின் ஓடிடி உரிமம் விற்பனையாகி இருக்கிறது. கூலி படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.120 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜன நாயகன் விஜய் முதல் கூலி ரஜினி வரை; அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள் லிஸ்ட் இதோ

46

3. ஜன நாயகன்

எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் ஜன நாயகன். கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இதன் ஓடிடி உரிமை ரூ.121 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி உள்ளது.

56

2. லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடி கொடுத்து வாங்கி இருந்தது.

66

1. தக் லைஃப்

ஓடிடியில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படங்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பது கமல்ஹாசனின் தக் லைஃப். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.149.7 கோடிக்கு வாங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... 4 மாதத்தில் 4 பிரம்மாண்ட படங்களுடன் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் கோலிவுட்!

Read more Photos on
click me!

Recommended Stories