பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த சூர்யா தற்போது 3-வது முறையாக இணைந்துள்ள படம் சூர்யா 41. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.