BiggBoss Gabriella : சொகுசு கார் வாங்கிய பிக்பாஸ் கேப்ரியல்லா - விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Published : May 04, 2022, 10:01 AM IST

BiggBoss Gabriella : நடிகை கேப்ரியல்லா, புதிதாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். தான் சம்பாதித்து வாங்கிய முதல் கார் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கேப்ரியல்லா தெரிவித்துள்ளார். 

PREV
14
BiggBoss Gabriella : சொகுசு கார் வாங்கிய பிக்பாஸ் கேப்ரியல்லா - விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. அப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். நடனத்தில் சிறந்து விளங்கிய இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.

24

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கேபிக்கு கிடைத்தது. அதன்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கேபி, அதில் நடந்த மணி டாஸ்கில் 5 லட்சத்துடன் கூடிய பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

34

அந்நிகழ்ச்சிக்கு பின்னர் கேபிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அது என்னவென்றால், ஈரமான ரோஜாவே சீரியலின் 2-ம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார் கேபி. அதில் குடும்பப் பாங்கான பெண் வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார். அந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

44

இந்நிலையில், நடிகை கேப்ரியல்லா, புதிதாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். தான் சம்பாதித்து வாங்கிய முதல் கார் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கேப்ரியல்லா தெரிவித்துள்ளார். டாடா ஹேரியர் என்கிற சொகுசு காரை தான் கேபி வாங்கி உள்ளார். அந்த காரின் மதிப்பு 20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. புது காருடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... varsha bollamma : கண் தானம் செய்த பிகில் பட நடிகை... ரியல் ‘சிங்கப்பெண்’ என பாராட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories