நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தை கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
28
vikram movie
இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமானது. பின்னர் கமலுக்கு உடல் நிலை சரியில்லத்தைக் காரணத்தாலும் தாமதமானது.
பின்னர் கடந்தாண்டு இறுதியில் பிக்பாஸ் சீசன் 5 வுக்கு பிறகு விக்ரம் படப்பிடிப்பு சூடு பிடித்தது. இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்கிய கமல் படப்பிடிப்பை முடித்து கொடுக்க அல்டிமேட்டில் இருந்து விலகினார்.
48
vikram movie
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளன. அதோடு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
58
vikram movie
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ப்ரோமோஷன் தாறுமாறாக செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அண்மையில் கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்ட விளம்பரம் செய்யப்பட்டது.
78
vikram movie
கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்க உள்ளாராம். இளம் நாயகிக்கு ஏற்றார் போல கமலை காண்பிக்க ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படம் வரும் ஜூன் 3 -ம் தேதி வெளியாகவுள்ளது.
88
vikram movie
வரும் மே மே 15ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ - டிரைலர் லான்ச்ஞ் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க வெளியீடு குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. கேஜி ஃஎப் 2 படத்தை வெளியிட்ட ஏபி என்டர்டைன்மெண்ட் விக்ரம் படத்தின் அமெரிக்காவில் திரையிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. மேலும் தமிழ்,தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அங்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.