சசிகுமார் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வர்ஷா பொல்லம்மா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார்.
27
இதையடுத்து விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்த அவர், அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார் வர்ஷா.
37
பிகில் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார்.
47
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான செல்ஃபி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் வர்ஷா. கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
57
நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வர்ஷா.
67
இந்நிலையில், நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
77
இது குறித்து அவர் கூறியதாவது, “ நாம் இறந்த பின்பும் இந்த உலகைப் பார்க்க வேண்டுமென்றால், அதற்கு கண் தானம் செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி பார்வை குறைபாடுடன் இருளிலேயே இருப்பவர்களின் வாழ்க்கையில் நாம் கொடுக்கும் கண் தானம் தான் ஒளி விளக்கை ஏற்றும்.” என கூறியுள்ளார்.