யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கே.ஜி.எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார்.
24
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியான இப்படத்திற்கு பட்டிதொட்டியெங்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது.
34
இப்படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. விரைவில் இப்படம் ஓடிடி-யிலும் வெளியிடப்பட உள்ளது.
44
இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் 320 கோடி ரூபாய் கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாம். இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இப்படம் வருகிற மே 27-ந் தேதி ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.