நடிகை ராதிகாவை ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த பிரதாப் போத்தன்... ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தது ஏன்?

First Published | Jul 15, 2022, 11:08 AM IST

நடிகர் பிரதாப் போத்தன் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட ராதிகாவை விவாகரத்து செய்தது ஏன் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் பிரதாப் போத்தன். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பிரதாப் போத்தனுக்கு, சொந்த வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமானதாக அமையவில்லை. குறிப்பாக இவர் இயக்கிய முதல் படம் ‘மீண்டும் ஒரு காதல் கதை’. படத்தின் தலைப்பை போலவே இவரது காதல் கதை ஆரம்பித்ததும் இந்த படத்தில் தான். இப்படத்தை தயாரித்த நடிகை ராதிகா மீது காதல் வயப்பட்டார் பிரதாப் போத்தன்.

இதையும் படியுங்கள்... Prathap Pothan: யார் இந்த பிரதாப் போத்தன்...? இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்கள் லிஸ்ட்..

Tap to resize

1985-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அந்த சமயத்தில் இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து கிசுகிசுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் அதே ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி ஒரே ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் அந்த காலகட்டத்தில் திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து செய்துகொண்ட நடிகை என்றால் அது ராதிகா தான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இவர்களின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து 1990-ம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் பிரதாப் போத்தன். இவர்களுக்கு கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு. கடந்த 2012-ம் ஆண்டு இரண்டாவது மனைவியையும் நடிகர் பிரதாப் போத்தன் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்

Latest Videos

click me!