நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ந் தேதி ரிலீசான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த கமல் படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசுகளையும் வாரி வழங்கினார். அதன்படி இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக அளித்த கமல், இதில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் கொடுத்தார்.
அதேபோல் இப்படத்தில் ரோலெக்ஸ் என்கிற மிரட்டலான வில்லனாக வந்து மாஸாக நடித்திருந்த சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல். இதன் மதிப்பு ரூ.42 லட்சம் ஆகும். இது புது வாட்ச் இல்லை என்றும், கமல் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தது எனவும் கூறப்பட்ட நிலையில், அவர் அந்த வாட்சை 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பயன்படுத்தி இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. கமல் இத்தனை ஆண்டுகளாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்த வாட்சை தான் சூர்யாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் நெகிழ்ந்துபோய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்?... மனம் திறந்த ‘பவி டீச்சர்’ பிரிகிடா