சினிமாவில் புதுப்புது முயற்சிகளை செய்து, அதில் வெற்றியும் கண்டவர் பார்த்திபன். இவரின் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் வியக்கத்தக்க படம் தான் இரவின் நிழல். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இதனை எடுத்துள்ளார் பார்த்திபன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.
இப்படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துள்ளார் பிரிகிடா. அவ்வாறு நடித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதன்படி, படத்தின் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அப்படி ஒரு காட்சி தேவைப்பட்டது. இதைப் பார்த்திபன் சார் என்னிடம் சொன்னபோது, இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.
இதையடுத்து நானும், பார்த்திபன் சாரும் எடுத்துக்கூறியதும், எனது பெற்றோர் அவ்வாறு நடிக்க சம்மதித்தனர். அதன்பின்னர் தான் அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, பலரையும் அது ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என விளக்கம் அளித்துள்ளார் பிரிகிடா.
இதையும் படியுங்கள்... அருள்நிதி நடித்துள்ள தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!